வலைவாசல்:இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/1
முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī,அரபு:عَبْدَالله مُحَمَّد بِن مُوسَى اَلْخْوَارِزْمِي) ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். இவர் பொ.கா 780 ஆம் ஆண்டளவில் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும், அக்காலத்தில் குவாரிசும்(Khwārizm) என்று அழைக்கப்பட்ட இடத்தில் பிறந்தார்.[3] by Ibn al-Nadim. இவ்விடம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் கிபி 850 ஆம் ஆண்டளவில் இறந்தார். அராபியப் புவியியலின் ஆரம்ப கர்த்தா எனக் கூறப்படும் இவர் ஒரு கணிதமேதையாகவும் வானியல் அறிஞராகவும் விளங்கினார். இந்திய எண்கள் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. படிமுறைத் தீர்வு எனப்படும் Algorithm மற்றும் பதின்ம இட எண்முறை (Algorism) ஆகியவை இவரின் இலத்தீன் மொழிப்பெயரான அல்கோரித்மி (Algoritmi) என்னும் பதத்திலிருந்து உருவானதாகும்.[4] இவர் இயற்கணிதவியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். கிபி 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட இயற்கணிதம் என்பதே ஒருபடிச் சமன்பாடு, இருபடிச் சமன்பாடு என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும். பலர் இவரை இயற்கணிதத்தின் தந்தை என்கின்றனர்.