வலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட சுயசரிதை/2

Gates at the World Economic Forum, 2007

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (ஆங்கிலம்: William Henry Gates அ Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.