வலைவாசல்:கணினி நிரலாக்கம்
கணினி நிரலாக்கம்
கணினி நிரலாக்கம் (நிரலாக்கம் அல்லது கோடிங் என்றும் அறியப்படும்) என்பது கணினி நிரல்களின் மூல நிரல்குறிகளை வடிவமைத்து, எழுதி, சோதித்து, பிழைநீக்கிப் பேணும் செயல்முறையாகும். மூல நிரலானது ஒன்றோ பலவோ நிரல்மொழிகளால் எழுதப்படும். நிரலாக்கத்தின் நோக்கமானது, கணினிகள் வேண்டியவாறு நடந்துகொள்ளவும், குறித்த செயல்களைச் செய்துமுடிக்கவும் தேவையான ஆணைக்கணங்களை உருவாக்குவதாகும். பெரும்பாலான சமயங்களில் மூல நிரல்களை வடிக்கும் செயல்முறைக்கு பயன்பாட்டு வரம்பு குறித்த அறிவு, சிறப்பு படிமுறைத் தீர்வுகள், ஏரணம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணத்துவம் தேவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை
இணைக் கணிப்பீடு (Parallel computing) என்பது ஒருவகையான கணக்கிடுதல் முறையாகும், இதில் பல கணக்கீடுகள் ஒரே நேரத்தில் செய்யப்படுகிறது. இது பெரும் கணக்குகள் அவ்வப்போது சிறுசிறு கணக்குகளாகப் பிரிக்கப்பட்டு பின்னர் அவை ஒருங்கிசையும் முறையில் ("இணையாக") தீர்க்கப்படும் என்னும் கொள்கையின் கீழ் இயங்குகிறது. பல்வேறு விதமான இணைக் கணிப்பீடு முறைகள் இருக்கின்றன: நுண்மி-நிலை, நெறிமுறைக் கட்டளை நிலை, தரவு மற்றும் செயல் இணைச் செயற்பாடு. இணைச் செயற்பாடு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது, முக்கியமாக உயர் செயல்பாட்டு கணிப்பீடுகளில், ஆனால் அதிர்வெண் அளவிடுதலைத் தடுக்கும் மெய்யியல் கட்டுப்பாடுகள் காரணமாக சமீப காலங்களில் இதன் மீதான ஆர்வம் பெருகியிருக்கிறது.சமீப காலங்களில் கணினிகளின் மின்ஆற்றல் பயன்பாடு (மேலும் இதன் விளைவாக வெப்ப உற்பத்தி) ஒரு பெரும் விஷயமாக இருப்பதால்,கணினி கட்டமைப்புகளில் இணைக் கணிப்பீடு மோலோங்கிய கருத்தியலாக ஆகியிருக்கிறது, முக்கியமாக பன்மடங்கு உள்ளீட்டு செயலிகள் வடிவில்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுயசரிதை
அகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள் (10 டிசம்பர் 1815 – 27 நவம்பர் 1852; இயற்பெயர் அகஸ்தா அடா பைரோன்) என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். சார்ல்ஸ் பாபேஜ்ஜின் பகுப்புப் பொறியில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட படிமுறைத் தீர்வு ஆகும். இதனால் இவர் முதல் நிரலராகக் கருதப்படுகின்றார். இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிக்கு அடா அடா நிரலாக்க மொழி எனப் பெயரிடப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படம்
குனூ இமேக்ஸ் என்பது யுனிக்சு போன்ற இயக்குதளங்களில், பொதுவாக ஒருங்கிணை விருத்திச் சூழலாகப் பயன்படுத்தப்படும் ஓர் உரை தொகுப்பி; பிழைநீக்கிகள் போல நிரலாக்குவோருக்குத் தேவையான பல கருவிகளைக் கொண்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
- ... decltype என்ற குறிச்சொல் சி++ நிரலாக்க மொழியில் தோன்றும் "தொடரியல் குழப்பங்களைச் சரி செய்ய" பயன்படும் என்று?
- ... சி நிரல் மொழி, பல இயங்கு தளங்களுக்கிடையில், நிரல் குறிகளை பெயர்க்கையில், தாழ்நிலை கணினி வளங்களை அணுக வேண்டி வடிவமைக்கப்பட்டது என்று?
பகுப்புகள்