வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்

பயன்பாடு‎

தொகு

சிறப்புப் பட துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்/வடிவமைப்பு.

சிறப்புப் படம்

தொகு

வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்/1

 
தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள்
படிம உதவி: Clt13

டிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்து நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த தொடருந்தும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. மொத்தம் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. படத்தில் தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள் காட்டப்பட்டுள்ளன.



வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்/2

 
மீட்பரான கிறிஸ்து சிலை
படிம உதவி: Artyominc

மீட்பரான கிறித்து பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக இது கருதப்படுகின்றது. இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.



வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்/3

 
எருசலேம் நகரின் பரந்த தோற்றம்
படிம உதவி: Bienchido

எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டில் உள்ளது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். ஆபிரகாமிடமிருந்து மரபுவழி வருகின்ற சமயங்களாகிய யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது. படத்தில் எருசலேம் நகரின் பரந்த தோற்றம் காட்டப்பட்டுள்ளது.



வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்/4

 
சாந்தோம் தேவாலயம்
படிம உதவி: PlaneMad

சாந்தோம் பசிலிகா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறு பசிலிகா வகையைச்சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய பயணிகளால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியரால் கதீட்ரல் வகைக்கேற்ப மீளவும் கட்டப்பட்டது. கோதிக் கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடமே தற்போது உள்ளது. இதனை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டிட பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோதிக் வகையாக பகுக்கப்பட்டுள்ளது.



முன்மொழிதல்

தொகு

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.

[[Image:{{{image}}}|center|200px|{{{caption}}}]]

படிம உதவி: {{{credit}}}

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]