வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புப் படம்/1
டிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்து நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த தொடருந்தும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. மொத்தம் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. படத்தில் தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள் காட்டப்பட்டுள்ளன.