வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மே
- மே 20, 325 - ஆரியனிச தப்பறைக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர நிசேயா நகரில் முதல் பொதுச்சங்கம் கூடியது. இதன் முடிவில் முதல் நிசேயா நம்பிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
- மே 30, 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் (படம்) ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- மே 20, 1605 - உரோமை நகரில் பிறந்த, இயேசு சபை குருவான தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
- மே 12, 1982 - போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.