வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜனவரி
- சனவரி 16, 1711 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த யோசப் வாஸ் அடிகள் கண்டியில் இறந்தார்.
- சனவரி 8, 1838 - ராபர்ட் கால்டுவெல் (படம்) மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
- சனவரி 6, 1929 - அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
- சனவரி 25, 1995 - யோசப் வாஸ் அடிகளார் திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/பெப்ரவரி
- பெப்ரவரி 12, 1908 - தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் ஜி. யு. போப் (படம்) இறப்பு.
- பெப்ரவரி 11, 1922 - திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார்.
- பெப்ரவரி 11, 1929 - இத்தாலிய அரசுக்கும் திருப்பீடத்துக்கும் இடையில் இலாத்திரன் உடன்படிக்கை கையெழுத்தானது.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மார்ச்
- மார்ச் 02, 1459 - திருத்தந்தை ஆறாம் ஹேட்ரியன் - பிறப்பு
- மார்ச் 30, 1492 - ஸ்பெயினில் இருந்த அனைத்து யூதர்களும் உரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- மார்ச் 08, 1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஏப்ரல்
- ஏப்ரல் 18, 1506 - நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வாத்திகன் நகர புனித பேதுரு பேராலயம் இடிக்கப்பட்டு, இன்றைக்கு கானக்கிடைக்கும் ஆலயத்தின் கட்டிடப்பணி தொடங்கப்பட்டது.
- ஏப்ரல் 15, 1984 - கத்தோலிக்க திருச்சபையின் உலக இளையோர் நாள் முதன்முதலாக உரோமை நகரில் கொண்டாடப்பட்டது.
- ஏப்ரல் 02, 2005 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (படம்) இறப்பு.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மே
- மே 20, 325 - ஆரியனிச தப்பறைக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர நிசேயா நகரில் முதல் பொதுச்சங்கம் கூடியது. இதன் முடிவில் முதல் நிசேயா நம்பிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
- மே 30, 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் (படம்) ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- மே 20, 1605 - உரோமை நகரில் பிறந்த, இயேசு சபை குருவான தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
- மே 12, 1982 - போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/சூன்
- சூன் 24, 1542 - கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்க வகித்தவரும், மறைவல்லுநருமான புனித சிலுவையின் புனித யோவான் பிறப்பு.
- சூன் 29, 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
- சூன் 9, 1834 - பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்த வில்லியம் கேரி (படம்) இறப்பு.
- சூன் 9, 1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/சூலை
- ஜூலை 16, 1915 - ஏழாம் நாள் வருகை சபையின் நிருவனர்களுள் ஒருவரான எல்லன் ஜி. ஒயிட் அம்மையார் (படம்) இறப்பு.
- ஜூலை 26, 1931 - கொலம்பஸ், ஒகையோவில் கூடியக்கூட்டத்தில் புதிதாய் ஒன்றிணைக்கப்பட்ட தங்களின் திருச்சபையின் பெயரை யெகோவாவின் சாட்சிகள் என தெரிவு செய்தனர்.
- ஜூலை 25, 1968 - திருத்தந்தை ஆறாம் பவுல் "மானிட உயிர்" (Humanae Vitae) என்னும் பொருளில் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார்.
- ஜூலை 09, 1995 - நவாலி தேவாலயத் தாக்குதல்:யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஆகஸ்ட்
- ஆகஸ்ட் 14, 1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் (படம்) கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 3, 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்க அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
- ஆகஸ்ட் 26, 1910 - அல்பேனியாவை பூர்வீகமாகக்கொண்ட இந்திய கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசா பிறப்பு.
- ஆகஸ்ட் 20, 2006 – கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில், அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/செப்டெம்பர்
- செப்டம்பர் 05, 1540 - திருத்தந்தை மூன்றாம் பவுல், புனித லொயோலா இஞ்ஞாசியாரால் துவங்கப்பட்ட இயேசு சபைக்கு ஒப்புதல் அளித்தார்
- செப்டம்பர் 19, 1658 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருக்களை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
- செப்டம்பர் 27, 1947 - திருவாங்கூர் மற்றும் கொச்சி மறை மாவட்டத்தின் பேராயரான சி. கே. ஜேக்கப் என்பவரின் தலைமையில் தென்னிந்தியத் திருச்சபை துவங்கப்பட்டது.
- செப்டம்பர் 23, 1968 - ஐந்துகாய வரம் பெற்ற முதல் குருவான புனித பியட்ரல்சினாவின் பியோ (படம்) இறப்பு.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர்
- அக்டோபர் 20, 1187 - திருத்தந்தை மூன்றாம் அர்பன் - இறப்பு
- அக்டோபர் 31, 1571 - மார்ட்டின் லூதர் தனது 95-அறிக்கையினை வெளியிட்டார். இந்த நிகழ்வே கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் துவக்க காரணி ஆகும்.
- அக்டோபர் 04, 1582 - இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பில் ஏற்ப்பட்ட சிக்கலைத்தீர்க்க கிரெகொரியின் நாட்காட்டியினை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
- அக்டோபர் 12, 2008 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இந்தியாவின் முதல் கத்தோலிக்க புனிதரான அல்போன்சா முட்டத்துபடத்துக்கு (படம்) புனிதர் பட்டம் அளித்தார்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/நவம்பர்
- நவம்பர் 01, 1509 - இன்னும் நிறைவடையாத சிசுடைன் சிற்றாலய உட்கூரை ஓவியங்களை (படம்) மைக்கலாஞ்சலோ பொதுமக்களின் பார்வைக்கென திறந்துவிட்டார்.
- நவம்பர் 18, 1626 - உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோவிலான புனித பேதுரு பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
- நவம்பர் 30, 1894 - "கீழைத் திருச்சபைகளின் மாண்பு" (Orientalium Dignitas) என்னும் தலைப்பில் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டார்.
- நவம்பர் 13, 1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/டிசம்பர்
- டிசம்பர் 09, 1579 - புனித மார்டின் தெ போரஸ் (படம்) - பிறப்பு
- டிசம்பர் 24, 1690 - யாழ்ப்பாணத்தில் நத்தார் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
- டிசம்பர் 16 1931 - ஆயரும் மறைவல்லுநருமான பெரிய ஆல்பர்டுக்கு திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.
- டிசம்பர் 08, 1965 - கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றது.