வலைவாசல்:கொழும்பு/தேர்வுக் கட்டுரை/1
கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது என கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும். கிறித்தோபர் கொலம்பசு நினைவாக கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார்.