வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/6
சேக்கிழார் சைவநூலான பெரியபுராணத்தின் ஆசிரியராவார். இவர் அருண்மொழி ராம தேவர் என்ற இயற்பெயரோடு குன்றத்தூரில் பிறந்தவர். இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்தவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புபெயரும் பெற்றார். அம்மன்னன் சமண நூலான சீவக சிந்தாமணியை போற்றுவதை கண்டு சைவநெறியின் மேன்மையை உணர்ந்து வாழ்ந்த அறுபத்து மூன்று சைவர்களின் வாழ்க்கை குறிப்புகள் கொண்ட நூலை இயற்ற எண்ணினார். தில்லை சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பெரியபுராண காப்பிய நூல் இயற்றப்பட்டது என்பர்.
இவரை தொண்டர் சீர் பரவுவார் என்று குலோத்துங்க சோழன் சிறப்பித்துள்ளார். இவருடைய வரலாற்றினை சேக்கிழார் புராணம் என்று உமாபதி சிவாச்சாரியாரும், சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் எழுதியுள்ளனர்.