வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/20
முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 26 – 1960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26 ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார். இவர் இளமையிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரை தேவர் இவரை வளர்த்து கல்வி புகட்டினார். மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896 ஆம் ஆண்டில் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரை தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.