வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/23
சபாபதி நாவலர் (1845/1846 - 1903) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ் மிக்க பெரும்புலவராய், சொல்லாற்றல் மிக்கவராய், சைவத்துக்கும், தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டு மன்னர்களாலும், மடத்துத்தலைவர்களாலும் மற்றும் அக்காலப் புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர். இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், வடகோவை என்னும் ஊரில் 1846 ஆம் ஆண்டில் சபாபதி நாவலர் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் சுயம்புநாதப் பிள்ளை. தாயின் பெயர் தெய்வயானை. சைவ வேளாளர் குலத்தினைச் சேர்ந்தவர். இவர் அக்காலப் புலவர்களில் சிறந்தவராகவும், சொல்வன்மை மிக்க கல்வியாளராகவும் விளங்கினார்.