வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா/சனி
- திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக் கவி ஆகும்.
- ஆயிரமசலா கிபி 1572 இல் வண்ணப் பரிமளப் புலவரால் இயற்றப்பட்ட தமிழில் முதலில் தோன்றிய இசுலாமிய இலக்கியங்களில் ஒன்று.
- மேரு மந்தர புராணம் என்பது சமண சமயத்தின் சாரம் எனக் கருதப்படும் தமிழ் நூலாகும்.