வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/28
நீண்ட பயணம் செ. கணேசலிங்கனின் முதல் புதினமாகும். இது ஈழத்து புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதற் பதிப்பு 1965 ல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு (1966). மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம்(1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த (Trilogy) ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட நாவல்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் க. கைலாசபதி குறிப்பிடுகிறார்.