வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/29
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும். இரண்டு பாகங்களில அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் உடையதாக உள்ளது.