தொழினுட்பம் என்பது, கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இணைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். தொழில்நுட்பம்; பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பறந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆளுவதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். உதாரணமாக, கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்.

தொழினுட்பம் குறித்து மேலும்...

குறிப்பு. இதன் அறிமுகத்திற்கான படிமங்கள் வலைவாசல்:தொழினுட்பம்/Intro/Image பட்டியலில் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தொழினுட்பம்/Intro&oldid=3490533" இலிருந்து மீள்விக்கப்பட்டது