வலைவாசல்:பௌத்தம்/பௌத்த அடியார்/1

பௌத்தம்

வஜ்ரயான பௌத்தத்தில், அக்‌ஷோப்ய புத்தர் ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர். மேலும் ஆதிபுத்தரின் அம்சமாக கருதப்படும் இவர் நிதர்சனத்தின் விழிப்புநிலையை குறிப்பவர். பாரம்பர்யத்தின் படி இவருடைய உலகம் வஜ்ரதாதுவின் கிழக்கே உள்ள அபிரதி(अभिरति) ஆகும். ஆனால் மக்களிடத்தில் அமிதாப புத்தரின் சுகவதியே பரவலாக உள்ளது. இவருடைய உலகத்தை குறித்து யாரும் அவ்வளவாக அறியார். இவருடைய துணை லோசனா ஆவார். இவர் எப்பொழுதும் இரண்டு யாணைகளுடனே சித்தரிக்கப்படுவார். இவருடையெ நிறம் நீலம், இவருடைய சின்னம், மணி, மூன்று உடுப்புகள் மற்றும் செங்கோல். இவருக்கு பலவிதமான வெளிப்பாடுகள் உள்ளன.