வலைவாசல்:மதுரை/உங்களுக்குத் தெரியுமா?/1
- மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலின் அருகே உள்ளது ஆயிரங்கால் மண்டபம்.
- மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலின் எதிரே உள்ள புதுமண்டபத்தில் அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும்.
- இங்குள்ள வண்டியூர் தெப்பக்குளமே தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும்.
- இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, திருமங்கலம் வட்டத்தில் 1877 வரை பயிரிடப்பட்டது.
- அழகர் மலை உச்சியிலுள்ள நுபுரகங்கை சுனையிலிருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும்.