வலைவாசல்:மதுரை

தொகு 

மதுரை - அறிமுகம்

Mdu Corporation logo.jpg

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாகவும் பாண்டியர்களின் கடைச்சங்கத் தலைநகராகவும் மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.

தொகு 

தேர்வுக் கட்டுரை

Madurai Nayak Palace Collage.jpg
திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
  • மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலின் அருகே உள்ளது ஆயிரங்கால் மண்டபம்.
  • மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலின் எதிரே உள்ள புதுமண்டபத்தில் அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும்.
  • இங்குள்ள வண்டியூர் தெப்பக்குளமே தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும்.
  • இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, திருமங்கலம் வட்டத்தில் 1877 வரை பயிரிடப்பட்டது.
  • அழகர் மலை உச்சியிலுள்ள நுபுரகங்கை சுனையிலிருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும்.


தொகு 

செய்திகள்

தொகு 

பகுப்புகள்

தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
தொகு 

விக்கித் திட்டங்கள்

தொகு 

சிறப்புப் படம்

0 Madurai Teppakulam illuminated.jpg

மதுரையிலுள்ள வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தெப்பக்குளம் 304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகளும், சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன்கூடிய விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளது.


தொகுப்பு


தொகு 

தொடர்பானவை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:மதுரை&oldid=1835487" இருந்து மீள்விக்கப்பட்டது