ஜில் ஜில் ஜிகர்தண்டா
மதுரையில் உருவான அனைவருக்குமான பானம்
ஜில் ஜில் ஜிகர்தண்டா என்பது தென்னிந்திய உணவு வகையாகும்.[1] இது மதுரைப் பகுதியிலிருந்து தோன்றிய குளிர்பானம் ஆகும். "ஜில் ஜில்" என்பது குளிர்ச்சியையும் "ஜிகர்தண்டா" என்பது குளிர்ந்த இதயம் என்றும் இந்தியில் பொருள்படும். மதுரைக் கடைத் தெருக்களில் புத்துணர்ச்சி பானமாக இன்றும் விற்கப்படுகிறது.
மாற்றுப் பெயர்கள் | ஜிகர்தண்டா |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா மதுரை |
பரிமாறப்படும் வெப்பநிலை | குளிர்ச்சி |
முக்கிய சேர்பொருட்கள் | கடற்பாசி, பால், சர்க்கரை, நன்னாரி சர்பத், பனிக்கூழ், சவ்வரிசி |
தேவையானப் பொருட்கள்
தொகுசெய்முறை
தொகு- பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.
- ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.
- நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.
- ஒரு கண்ணாடிக் குவளையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.
குறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "In search of Madurai Jigarthanda". த இந்து. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
வெளியிணைப்புகள்
தொகு- ஜிகர்தண்டா செய்முறை- அறுசுவை இணையதளம் பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம்
- ஜிகர்தண்டா செய்முறை- வல்லமை இணையதளம் பரணிடப்பட்டது 2020-05-19 at the வந்தவழி இயந்திரம்