நன்னாரி
நன்னாரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
துணைக்குடும்பம்: | Asclepiadoideae
|
பேரினம்: | Hemidesmus
|
இனம்: | H. indicus
|
இருசொற் பெயரீடு | |
Hemidesmus indicus லி. R.Br. | |
வேறு பெயர்கள் | |
|
நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டதாக, பச்சை நிற இலைகளில், வெண்ணிறத்தில் வரிகள் கொண்டிருக்கும். மேலும் இதன் இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனந்தமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர்
பெயர்கள்
தொகுநன்னாறிக்கு அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்ற வேறு பெயர்கள் உண்டு. இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் ‘பாற்கொடி’ என்றும், வாசனையைக் கொடுப்பதால் ‘சுகந்தி’ என்றும் பூமிக்குள் வளரும் இதன் வேர்த்தொகுப்பால் ‘பாதாளமூலி’ என்ற பெயரும் இதற்கு அமைந்தது. இதில் நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி போன்ற வகைகள் உள்ளன.[1]
பயன்கள்
தொகுபோக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (4 ஆகத்து 2018). "மூலிகையே மருந்து 17: நாடி வரும் நலம்… நன்னாரி!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Botanical : தற்கால மூலிகை - நன்னாரி
- நன்னாரி - இந்திய சரசபரில்லா பரணிடப்பட்டது 2012-12-06 at Archive.today
- ஹென்றியெட்டா மூலிகைகள் வலைத்தளம் Henriette's Herbal Homepage - நன்னாரி பற்றி
- RASAYANA: Ayurvedic Herbs for Longevity and Rejuvenation by Dr H. S. Puri (2003), published by Taylor & Francis, London, pages 43–45.