கோச்சடை

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கோச்சடை (Kochadai) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் வடமேற்கில்,[1][2][3] 9°56′35.2″N 78°04′51.2″E / 9.943111°N 78.080889°E / 9.943111; 78.080889 (அதாவது, 9.943100°N, 78.080900°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 166 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, விராட்டிப்பத்து, துவரிமான், கூடல் நகர், தத்தனேரி, காளவாசல், எஸ். எஸ். காலனி, அரசரடி மற்றும் பழங்காநத்தம் ஆகியவை கோச்சடை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

கோச்சடை
Kochadai
கோச்சடை
கோச்சடை Kochadai is located in தமிழ் நாடு
கோச்சடை Kochadai
கோச்சடை
Kochadai
கோச்சடை, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′35.2″N 78°04′51.2″E / 9.943111°N 78.080889°E / 9.943111; 78.080889
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
166 m (545 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625016
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, விராட்டிப்பத்து, துவரிமான், கூடல் நகர், தத்தனேரி, காளவாசல், எஸ். எஸ். காலனி, அரசரடி மற்றும் பழங்காநத்தம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
இணையதளம்https://madurai.nic.in

கோச்சடை பகுதியிலிருந்து மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 4 கி.மீ. தூரத்திலேயே அமையப் பெற்றுள்ளது. இங்கிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் மற்றும் சுமார் 12 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. கோச்சடை பகுதியிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.

கோச்சடையில் கண்மாய் ஒன்று அமையப்பெற்று உள்ளது. வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரில், இதில் சுமார் 105 மில்லியன் கன அடி தண்ணீர் வரை சேமிக்கப்பட்டு, 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இருபது ஆண்டுகளாக இக்கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், வறண்டு காணப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயில் நீர் தேக்கி, மீண்டும் பாசன வசதி பெற மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.[4]

கோச்சடையில், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர் வரலாற்றுத் தொடர்புடைய கோயில் ஒன்று உள்ளது. வில்லாயுதமுடைய அய்யனார் கோயில்[5][6] என்றும் வில்லேந்திய அய்யனார் கோயில்[7] என்றும் அழைக்கப்படும் இக்கோயிலில் கோச்சடை முத்தையா (மூத்த அய்யனார்) என்ற சன்னதியும் உள்ளது.

கோச்சடை பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[8] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. David Abram; Edwards, Nick (2004). The Rough Guide to South India (in ஆங்கிலம்). Rough Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-103-6.
  2. India Election Commission (1976). Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976 (in ஆங்கிலம்). Election Commission, India.
  3. Anandavalli, A. (1986). Water Pollution in Madurai, Yesterday (in ஆங்கிலம்). Madurai Kamraj University, Publications Division.
  4. "கோச்சடை கண்மாயில் தண்ணீர் தேக்க கோரி மனு". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-01-05. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  5. "Arulmigu Villayuthamudaiya Ayyanar Temple, Kochadai, Madurai - 625016, Madurai District [TM032024].,Muthaiahsamy". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  6. "Aiyanarswami Temple : Aiyanarswami Aiyanarswami Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  7. "கோச்சடை முத்தையா. எனினும் வில்லேந்திய ஐயனார்". Dailyhunt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  8. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. 2021-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்சடை&oldid=3772381" இலிருந்து மீள்விக்கப்பட்டது