கூடல் நகர், மதுரை
கூடல் நகர் (Koodal Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] ஜல்லிக்கட்டு விளையாட்டடிற்குப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஊருக்கு கூடல் நகர் வழியாகப் பயணம் செய்ய சாலை வசதிகள் உள்ளன.[3] 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் மதுரை மாநகராட்சியில் மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. அதன் பிறகு, மாநகராட்சி விரிவாக்கத்திற்காக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் கூடல் நகர் பகுதியும் அடங்கும்.[4]
கூடல் நகர், மதுரை Koodal Nagar, Madurai | |
---|---|
ஆள்கூறுகள்: 9°57′51″N 78°05′48″E / 9.964300°N 78.096600°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 166 m (545 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண்கள் | 625018 |
தொலைபேசி குறியீடு | 0452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், விளாங்குடி, ஆரப்பாளையம், தத்தனேரி |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | பழனிவேல் தியாகராஜன் |
இணையதளம் | https://madurai.nic.in |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 166 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கூடல் நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°57'51.5"N, 78°05'47.8"E (அதாவது, 9.964300°N, 78.096600°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுமதுரை, செல்லூர், கோரிப்பாளையம், விளாங்குடி, ஆரப்பாளையம் மற்றும் தத்தனேரி ஆகியவை கூடல் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுமதுரை மாநகராட்சி பேருந்து சேவைகள் மூலம் கூடல் நகர் பயனடைகிறது. கூடல் நகர் பகுதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளது. மேலும், இங்கிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில், மதுரையின் நடுப்பகுதியில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மற்றும் சுமார் 8 கி.மீ. தொலைவில் மதுரை - அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலிருந்தும் கூடல் நகர் வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து போக்குவரத்து
தொகுகூடல் நகரில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது.[5] மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் வந்து சேரும் தொடருந்துகளில் சில, இந்த தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும், கூடல் நகரிலிருந்து கிளம்பி அமிர்தசரஸ் செல்லவும், மறு மார்க்கத்தில் அமிர்தசரஸிலிருந்து கிளம்பி கூடல் நகர் வந்து சேரும் பாரத் கௌரவ் தொடருந்து மூலமும் கூடல் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் பயனடைகின்றனர்.[6] தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், கூடல் நகர் பகுதியிலிருந்து சுமார் 6.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
தொகுகூடல் நகர் பகுதியிலிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில், மதுரை வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
கல்வி
தொகுபள்ளிகள்
தொகுகெஸ்விக் பொது பள்ளி மற்றும் புனித சூசையப்பர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை கூடல் நகர் பகுதியிலுள்ள முக்கிய பள்ளிகளாகும்.
அரசியல்
தொகுகூடல் நகர் பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பழனிவேல் தியாகராஜன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Koodal Nagar - Find link". edwardbetts.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
- ↑ The Catholic Directory of India (in ஆங்கிலம்). C.B.C.I. Centre. 2005.
- ↑ "இது சாலையா? மணல் மேடா? மதுரை கூடல் நகர் - ஆணையூர் சாலையின் அவலம்.." (in ta). 2022-10-26. https://tamil.news18.com/photogallery/madurai/koodal-nagar-anaiyur-road-covered-with-sand-completely-824903.html.
- ↑ மாலை மலர் (2022-12-06). "ஆமை வேகத்தில் நடக்கும் சாக்கடை-குடிநீர் திட்டப்பணிகள்" (in ta). https://www.maalaimalar.com/news/district/madurai-news-sewerage-drinking-water-projects-are-proceeding-at-a-snails-pace-545470.
- ↑ Parliament House of the People, India; Sabha, India Parliament Lok (2007). Lok Sabha Debates (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat.
- ↑ The Hindu Bureau (2022-11-01). "Bharat Gaurav train service from Koodal Nagar on Nov. 3" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/bharat-gaurav-train-service-from-koodal-nagar-on-nov-3/article66082043.ece.