அவனியாபுரம், மதுரை
அவனியாபுரம் (Avaniapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும். மதுரைக்குத் தெற்கே, மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அவனியாபுரம் என்கிற இப்பகுதி, கடந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில், 60-வது வார்டில் உள்ளது.[4] 94-ஆவது வார்டாக இருக்கிறது. இதன் பழமையான பெயரில், அவனிபசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இதன் பெயர் மருகி அவனியாபுரம் என தற்போது அழைக்கப்படுகிறது.
அவனியாபுரம் | |||
— மதுரை மாநகராட்சி - 60-வது வார்டு — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | மதுரை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை | 51,587 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகு2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 51,587 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள்; 49% பெண்கள் ஆவார்கள். அவனியாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அவனியாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சங்க இலக்கியத்தில்
தொகுசங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில், "மாடமலி மறுகின் கூடற் குடவயின்" என்ற பாடல் வரியில், "மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றம்"[1] என்ற வரியின் பொருள் திருப்பரங்குன்றத்தின் இருப்பிடம் குறித்து நக்கீரன் பாடல் உணர்த்துகிறது. அந்த காலத்தில் மதுரை என்பது திருப்பரங்குன்றத்தின் மேற்கில் இருந்தது என புலப்படுகிறது. ஆய்வாளர்கள் கருதுகோளின் படி, பழைய மதுரை என்பது அவனியாள்புரம் எனப்பட்ட அவனியாபுரமாக இருந்திருக்க வேண்டும்.[2]
ராணி மங்கம்மாள் சிலை, கல்வெட்டு
தொகுஅவனியாபுரத்தின் கிழக்கே உள்ள வல்லானந்தபுரம் என்ற ஊரில் கி.பி. 1693ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.[3] இங்கு ஆனந்த அனுமார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே சிதைந்த நிலையில் கோவிலின் அதிட்டான பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் 'வல்லப சதுர்வேதி மங்கலம்' என்ற பிராமண ஊர்ப் பெயரும், 'வல்லப விண்ணகரம்' என்ற பெருமாள் கோவில் பெயரும் இடம்பெற்றுள்ளன. இங்கு துர்க்கைக்கான கோயிலும், அதற்கான நிலக்கொடைகள் குறித்தும், பிரவுவரி திணைக் களத்து முக வெட்டி அதிகாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டை 'தேவன் பணையன்' என்ற அண்டை நாட்டு தச்சன் செதிக்கியுள்ளதாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோவில் முன் உள்ள கல்வெட்டுத் தூணில் சங்கு, சக்கரம், நாமம் செதுக்கபட்டுள்ளன. இக்கோவிலைக் கட்டியது ராணி மங்கம்மாள் என்பதும் தெரியவருகிறது. இக்கோவிலின் பெயர் அனுமார் ஆழ்வார் என, கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இக்கோவில் அருகில் அவரால் கட்டப்பட்ட அலங்கார பிள்ளையார் கோவில் தற்போது இல்லை. ராணி மங்கம்மாள் தனது முத்தியப்ப நாயக்கருக்கு, புண்ணியமாக கோவிலைக் கட்டியுள்ளார் என்பது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. அனுமார் கோவில் எதிரே உள்ள கருடதம்பத்தின் அடிப்பகுதியில், பெண்ணரசி ஒருவரின் உருவம் வணங்கியநிலையில் உள்ளது. இந்த பெண்ணரசியின் தலையில் கிரீடம், இடையில் வாள் மற்றும் பாதம் வரை ஆடை என வடிவமைக்கபட்டுள்ளது. இந்த உருவச்சிலை ராணி மங்கம்மாள் சிலை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
தொகுஇக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர்) மூலவராகவும், பாலாம்பிகை தாயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி, தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் போது, தோழியர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில், (அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மதுரை [4]) காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இதுவே இத்தல வரலாறு ஆகும்.
பிற கோயில்கள்
தொகு- ஸ்ரீமத் பத்ராவதி சமேத பாவனாரிஷி திருக்கோவில்
- ஸ்ரீ மந்தையம்மன் கோவில்
- அய்யனார் கோவில்
- ஆண்டாள் மாரியம்மன் கோவில்
- ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில்
- ஸ்ரீ குருநாதன் கோவில்
- சிவன் கோவில்
- ஆஞ்சநேயர் கோவில்
- மாரியம்மன் கோவில்
- அனுமார் கோவில்
ஜல்லிக்கட்டு விழா
தொகுதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தை மாதம் முழுவதும் நடத்தப்படும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரத்தில் தை முதல் நாளில் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்". Archived from the original on 2019-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link)