மதுரையில் போக்குவரத்து
இந்தியாவின் தென் தமிழகத்தில் உள்ள மதுரை, நன்கு வளர்ந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. மதுரையின் போக்குவரத்து முறைகளில் சாலை, தொடருந்து, வானூர்தி ஆகியவை அடங்கும். மதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து சிக்கல்கள் அதிகரித்து வருவதால், நகர போக்குவரத்திலும், புறநகர் பகுதிகளிலும் ஏற்படும் போக்குவரத்து சிக்கல்களைக் குறைக்க பெருந்திட்டங்கள் உருவாக்கபட்டுள்ளன. [உதாரணம் தேவை]
சாலை
தொகுமதுரை தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேலும் தென் மாவட்டங்களை தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுடன் இணைக்கிறது. மேலும் இது தமிழ்நாட்டின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. நகரத்தில் புழங்கும் மக்கள் தொகை மிகவும் அதிகமாகும். தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பெரும்பாலான மக்கள் மருத்துவம், கல்வி, சந்தைப்படுத்தல், சரக்கு, கொள்முதல் செய்ய, சுற்றுலா அல்லது அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக வருகை தருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கியமான போக்குவரத்து வட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆட்டோ ரிக்சாக்கள் எனப்படும் தானிகள் 30,126 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட மூச்சக்கர வாகனங்கள் உள்ளன. அவை வணிக ரீதியாக நகரத்திற்குள் வாடகைக்கு கிடைக்கின்றன.[1] பொது போக்குவரத்துக்காக அரசால் இயக்கப்படும் நகர பேருந்துகள் மட்டுமல்லாமல், உள்ளூர் போக்குவரத்துக்கு வசதியாக பதிவு செய்யப்பட்ட 236 தனியார் சிற்றுந்துகளும் உள்ளன.[1] மதுரை பின்வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைகிறது;
சாலை | எண் | பாதை |
---|---|---|
தேசிய நெடுஞ்சாலை | 7 | கன்னியாகுமரி - திருநெல்வேலி - மதுரை நகரம் - சேலம் - பெங்களூர் - வாரணாசி |
தேசிய நெடுஞ்சாலை | 45 பி | தூத்துக்குடி - மதுரை - திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் - சென்னை (கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு) |
தேசிய நெடுஞ்சாலை | 49 | இராமேசுவரம் - திருபுவனம் - மதுரை - கொச்சி |
தேசிய நெடுஞ்சாலை | 85 | தொண்டி - சிவகங்கை - மதுரை - தேனி - கொச்சி |
தேசிய நெடுஞ்சாலை | 208 | மதுரை - இராஜபாளையம் - தென்காசி - செங்கோட்டை - கொல்லம் |
மதுரை நகரம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலைகளான மா.நெ-32, மா.நெ-33, மா.நெ-72 ஆகியவை, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை நகரத்துடன் இணைக்கின்றன.[2] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வலையமைப்பின் ஏழு வட்டங்களில் மதுரையும் ஒன்று.[2] மேலும் இந்த நகரம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (மதுரை) தலைமையகமாக உள்ளது. இந்தப் போக்குவரத்துக் கழகமானது மதுரை திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்தை வழங்குகிறது.[3]
நகர பேருந்து சேவை
தொகுசென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகரம் சிறந்த நகரப் பேருந்து வசதியைக் கொண்டுள்ளது. தநாஅபோக (மதுரை) மூலம் இயக்கப்படும் மதுரை நகரப் பேருந்துகளால் நகரின் முக்கியப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அசோக் லேலேண்ட், டாடா மார்கோபோலோ போன்ற பெரும்பாலான பேருந்துகளில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. நகர பேருந்துகள் பகல் நேரத்தில் கிடைக்கின்றன. ஆனால் சில முக்கியமான பகுதிகளில் இரவு பகல் என நாள் முழுவதும் நகர பேருந்து சேவைகள் உள்ளன.
மதுரை மாநகரில் பொது போக்குவரத்தில் மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பேருந்துகள் விரைவாக செல்வதுடன், பயண நேரத்தை குறைக்கின்றன.
மதுரை மாநகரில் முக்கிய நகர பேருந்து நிலையங்கள் பின்வருமாறு;
- பெரியார் பேருந்து நிலையம் மதுரை மத்தி
- அண்ணா நகர் பேருந்து நிலையம் மதுரை கிழக்கு
- அனுப்பானடி பேருந்து நிலையம் மதுரை கிழக்கு
- கே. புதூர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- பழங்காநத்தம் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
- திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
- திருநகர் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
- திருமங்கலம் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- மேலூர் பேருந்து நிலையம் மதுரை வடகிழக்கு
- பூங்கா நகர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- வாடிப்பட்டி பேருந்து நிலையம் மதுரை மேற்கு
- ம. கா. ரோடு பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- ஆனையூர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- வண்டியூர் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
- பேரையூர் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- டி. கல்லுபட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- உசிலம்பட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- ஏழுமலை பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- திருப்பாலை பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- பாலமேடு பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- அழகர் கோவில் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- சோழவந்தான் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர்
- எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்(மாட்டுத்தாவணி) மதுரை வடக்கு
- ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- எல்லிஸ் நகர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
- மதுரை சர்வதேச விமான நிலைய பேருந்து நிலையம் மதுரை தெற்கு
புறநகர் பேருந்து சேவை
தொகுவெளியூர்களுக்குச் செல்ல மதுரையில் இரண்டு முக்கியமான பேருந்து நிலையங்கள் உள்ளன;
- எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்
- ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்
தொகுஎம். ஜி. ஆர் பபேருந்து நிலையம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள ஐஎஸ்ஓ 9001: 2000 சான்றளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் ரூ100 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிறகு, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் வட மாவட்டங்களான சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கும்பகோணம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு அதிகமான புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேடை | பேருந்து வழித்தடம் |
---|---|
1 | சென்னை, பெங்களூர், மைசூர், திருப்பதி, கொச்சி, புதுச்சேரி, திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் (SETC) |
2 | திருச்சிராப்பள்ளி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், வேலூர், நெய்வேலி டி. எஸ்., நத்தம் |
3 | சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், சிதம்பரம், புதுக்கோட்டை, கர்நாடக மாநில பேருந்துகள் |
4 | காரைக்குடி, தேவகோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பொன்னமராவதி, மேலூர் |
5 | இராமநாதபுரம், இராமேசுவரம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, கேரள மாநில பேருந்துகள் |
6 | ராஜபாளையம், தென்காசி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, பாபநாசம், கடையநல்லூர் |
7 | தூத்துக்குடி, திருச்செந்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், விளாத்திகுளம் |
8 | திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, நாங்குநேரி, வள்ளியூர் |
ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
தொகுமதுரையின் மற்றொரு முக்கியமான பேருந்து நிலையமாக இது உள்ளது. இங்கு இயக்கப்படும் பேருந்துகளில் சில கோவை மண்டலம் மற்றும் சேலம் மண்டலத்தைச் சேர்ந்தவை ஆகும். இங்கிருந்து திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகமண்டலம், பழனி, சேலம், ஒட்டன்சத்திரம், கரூர், தருமபுரி, ஒசூர், கொடைக்கானல் பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கபடுகின்றன.
அரபாளையம் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளை கையாள 10 தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன
இந்தப் பேருந்து நிலையம் நகரத்தின் உள்ளே அமைந்திருப்பதாலும், அதன் அளவாலும், பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் எப்போதும் நெரிசலாகத் தெரிகிறது. எனவே அடுத்து எய்ம்ஸ் அருகே ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நகரின் போக்குவரத்தை குறைக்க நகரத்திற்கு வெளியே மாற்றப்படும்.
தடம் | பேருந்து வழித்தடம் |
---|---|
1 | பெரியகுளம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் |
2 | தேனி, போடிநாயக்கனூர், உசிலம்பட்டி, எழுமலை, நிலக்கோட்டை வழியாக சோழவந்தான். |
3 | கம்பம், குமுளி, தேவாரம், உத்தமபாளையம், தேக்கடி, தேனி |
4 | பிட் தடம் (இலவச பாஸ் ) |
5 | ஈரோடு, சத்தியமங்கலம் |
6 | திண்டுக்கல் |
7 | சேலம், தருமபுரி, கரூர், நாமக்கல், கிருட்டிணகிரி, ஒசூர் |
8 | ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் (உக்கடம்) |
9 | ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், ஊட்டி |
10 | ஒடஞ்சத்திரம், திருப்பூர், கோபிசெட்டிபாளையம் |
தொடருந்து
தொகுமதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய ரயில்வே சந்திப்புகளில் ஒன்றாகும். மேலும் மதுரை தொடருந்து கோட்டத்தின் தலைமாயகமாக மதுரை உள்ளது. இது இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தென்னக இரயில்வேயில் வருவாய் அடிப்படையில் மதுரை கோட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தென்னக இரயில்வேயின் ஏ1 தரநிலையங்களில் ஒன்றாகும் (ரூ. 50 கோடி வருமானம் ஈட்டும் தொடருந்து நிலையங்கள் ஏ1 தரம் பெறும்). மதுரையில் இரண்டு முனையங்கள் உள்ளன.:
- மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (பயணிகள் கையாளுதல்)
- கூடல்நகர் தொடருந்து நிலையம் (சரக்குகளைக் கையாளுதல்)
மதுரை சந்திப்பு தென் தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான தொடருந்து சந்திப்பாகும். மேலும் இது தென்னக இரயில்வேயின் தனி கோட்டமாக உள்ளது.[4] இது சென்னை கோட்டத்திற்கு அடுத்தபடியாக தென்னக இரயில்வேயில் இரண்டாவது பெரிய வருவாய் கோட்டமாகும். சென்னை, மும்பை, புது தில்லி,செய்ப்பூர்,பெங்களூர், ஐதராபாத், திருவனந்தபுரம், மைசூர், கோயம்புத்தூர், கொல்லம், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, இராமேசுவரம், சண்டிகர், அகமதாபாது, விசயவாடா, கொல்கத்தா, நாக்பூர், போபால். போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மதுரையிலிருந்து நேரடி தொடருந்துகள் உள்ளன.[5] மாநில அரசு 2011 ஆம் ஆண்டு ஒற்றைத் தண்டூர்தி திட்டத்தை அறிவித்தது. மதுரை மோனோரயில் திட்ட நிலையில் உள்ளது.[6]
மதுரை சந்திப்பில் ரயில் பாதைகள்
தொகுவரிசை எண். | செல்லும் ஊர் | கடந்து செல்லும் நிலையங்கள் | வகை / தடம் |
---|---|---|---|
1 | சென்னை எழும்பூர் | திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு | பரந்த, மின்மயமாக்கப்பட்ட-இரட்டை பாதை |
2 | கன்னியாகுமரி | விருதுநகர் சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு | பரந்த, மின்மயமாக்கப்பட்ட-ஒற்றைப் பாதை |
3 | இராமேஸ்வரம் | மானாமதுரை சந்திப்பு, ராமநாதபுரம் | பரந்த, ஒற்றைப் பாதையில் |
4 | போடிநாயக்கன்னூர் | உசிலம்பட்டி, தேனி | பரந்த-கீழ் மாற்றம் |
5 | தூத்துக்குடி | அருப்புக்கோட்டை | பரந்த-கீழ் கணக்கெடுப்பு (முன்மொழியப்பட்டது ) |
6 | காரைக்குடி | மேலூர், திருப்பத்தூர் | பரந்த-கீழ் கணக்கெடுப்பு (முன்மொழியப்பட்டது ) |
மதுரை புறநகர் தொடருந்து நிலையங்கள்
தொகுவரிசை எண் | நிலையத்தின் பெயர் | நிலையக் குறியீடு |
---|---|---|
1 | கூடல்நகர் | KON |
2 | சமயநல்லூர் | SER |
3 | திருப்பரங்குன்றம் | TDN |
4 | திருமங்கலம் | TMQ |
5 | மதுரை கிழக்கு | MES |
6 | சிலைமான் | ILA |
7 | வடபழஞ்சி | VAJ |
8 | கீழக்குயில்குடி | KKY |
9 | சோழவந்தான் | SDN |
வானூர்தி
தொகுமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: IXM, ICAO: VOMD) என்பது தமிழ்நாட்டின் மதுரைக்கு சேவை செய்யும் வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையமானது மதுரை தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 கி. மீ (7.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வானூர்தி நிலையம் தமிழ்நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. மேலும் இலங்கையின் கொழும்புக்கு சர்வதேச விமானப் போக்குவரத்தை 20 செப்டம்பர் 2012 அன்று தொடங்கியது.[7] இப்போது, இது துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சேவைகளை வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய வானூர்தி நிறுவனங்கள் இந்த நிலையத்தில் தங்கள் வானூர்திகளை இயக்குகின்றன.[8] இந்த வானூர்தி நிலையம் 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் வரை 520,000 பயணிகளைக் கையாண்டது.[9][10][11]
முனையங்கள்
தொகுஇந்த விமான நிலையமானது அருகிலுள்ள அடுத்தடுத்து இரண்டு முனையங்களைக் கொண்டுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த முனையமானது சர்வதேச மற்றும் உள்நாட்டு போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையத்தை சரக்கு வளாகமாக மாற்ற இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பயணிகள் முனையம்
தொகுபெருநகரங்களில் இல்லாத 35 வானூர்தி நிலையங்களை நவீனமயமாக்குவதன் ஒரு பகுதியாக, இவாஆ பழைய முனையத்திற்கு அருகில் ஒரு அதிநவீன புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தை உருவாக்கியது. ₹1.29 பில்லியன் (US$15 மில்லியன்) செலவில் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையக் கட்டடம் 12 செப்டம்பர் 2010 அன்று திறக்கப்பட்டது. பெரிய ஜெட் விமானங்களுக்கு வந்திறங்க ஏதுவாக ஓடுபாதைகளை 12,500 அடி (3,800 மீ) நீளத்திற்கு விரிவுபடுத்துவதற்காக மொத்தம் 610 ஏக்கர் (250 ஹெக்டேர்) நிலத்தை கையகப்படுத்தப்படுகிறது. 17,560 m2 (189,000 sq ft) பரப்பளவைக் கொண்ட இந்த முனையம், வருகை மற்றும் புறப்படுகையில் ஒவ்வொன்றிலும் 250 பயணிகளைக் கையாள முடியும்.[12] விமான நிலைய வாகன தரிப்பிடப் பகுதியில் 375 மகிழுந்துகளையும் 10 பேருந்துகளையும் நிறுத்தும் திறன் உள்ளது.[13] புதிய முனையத்தின் சில அம்சங்கள் பின்வருமாறு:[14]
- 16 உள் நுழைவு கவுண்டர்கள்
- 12 குடிவரவு கவுண்டர்கள்
- 1 பாதுகாப்பு கவுண்டர்
- 5 சுங்க கவுண்டர்கள்
- 3 கன்வேயர் பெல்ட்கள் (47 m (154 அடி) ஒவ்வொன்றும்)
- சாமான்களுக்கான 2 எக்ஸ்ரே ஸ்கேனர்கள்
- 105 சிஐஎஸ்எஃப் பலம்
- மொத்த விமான நிறுத்துமிடங்கள் = 7
- 1 B767-400
- 1 A310-300
- 3 B737-800W/A320-200
- 2 ஏடிஆர் 72-500.[14]
புதிய முனையத்தில் இரண்டு ஓய்வறைகள் இருக்கும், இந்திய வானூர்தி ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு விஐபி லவுஞ்ச் மற்றும் மதுரை டிஎன்சிசி-யால் நிர்வகிக்கப்படும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் (CIP) ஓய்வறை ஆகியவை ஆகும்.[15]
சரக்கு முனையம்
தொகுமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வளர்ந்து வரும் சரக்கு திறனைக் கருத்தில் கொண்டு, பழைய முனையத்தை முழு அளவிலான சரக்கு வளாகமாக மாற்ற இந்திய வானூர்தி ஆணையம் முடிவு செய்துள்ளது.. மதுரை சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாள்வது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் 28 மே 2013 தேதியிட்ட சுங்க அறிவிப்புகளை வெளியிட்டது.
சேவையாற்றும் விமான நிறுவனங்கள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Regional Transport Office – Registered commercial vehicles in Tamil Nadu.
- ↑ 2.0 2.1 Highways Circle of Highways Department, Tamil Nadu.
- ↑ Tamil Nadu State Transport Corporation (Madurai) Limited 2011.
- ↑ Southern Railway Madurai division.
- ↑ Train Running Information.
- ↑ ibnlive 6 June 2011.
- ↑ The Hindu 29 August 2012.
- ↑ Airports Authority of India – Madurai Airport.
- ↑ Air traffic statistics.
- ↑ International Air traffic movement.
- ↑ International Air freight movement.
- ↑ "Airports Authority of India". Aai.aero. 6 January 2011. Archived from the original on 20 February 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
- ↑ "Legislators, tour operators demand international flights from Madurai". NDTV.com. 29 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
- ↑ 14.0 14.1 Airports Authority of India பரணிடப்பட்டது 20 பெப்பிரவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Cities / Madurai : CIP lounge taken on lease". The Hindu. 23 January 2012. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.