இந்தியாவில் போக்குவரத்து

சுதந்திர இந்தியாவில் போக்குவரத்தானது தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . 3,287,240 ச.கிமீ நிலப்பரப்பு கொண்ட இந்தியாவில் கணக்கிடப்பட்ட 1,028,737,436 மக்கள் வாழ்கின்றதினால் போக்குவரத்து தேவையானதாகவும் , வசதியானதாகவும் இருக்கிறது . 1990 களில் இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டதினால் அடிப்படி வசதிகளின் முன்னேற்றம் நாடெங்கும் வேகமாக வளர்ந்து . இன்று நிலம் , நீர் , ஆகாயம் என்று எல்லா வழியிலும் போக்குவரத்து நன்கு செயல் படுகிறது . ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ளது இந்தியாவில் போக்குவரத்தை அடைவது அனைத்து இடங்களிலும் சரிசமமாக இல்லை என்பதை உணர்த்தியது . இரு சக்கர வாகனமானது வெறும் பத்து விழுக்காடு ( அதாவது 102,873,744 மக்கள் ) குடும்பத்தினர்களே சொந்தமாக கொண்டிருந்தது . சீருந்துகள் கொண்டவர்கள் பணம்படைத்தவர்களான 0.7 விழுக்காடு (அதாவது 7,201,163 மக்கள் ) குடும்பத்தினர்களே வைத்திருந்தனர் . பொது போக்குவரத்து இந்தியாவில் முன்னனி போக்குவரத்து நிறுவனமாக இருக்கிறது .மேலும் இதுவே அதிகம் பயன்படுத்தப் படுவதாக உள்ளது . ஒரு வருடத்தின் சராசரி உலக போக்குவரத்தான 6 பில்லியன் பயணிகள் மற்றும் 350 மில்லியன் டன் சரக்குகளில் இந்தியாவின் தொடர்வண்டி போக்குவரத்து மிக நீளமானதாகவும் , நான்காவது அதிபயன்பாட்டு தளமாகவும் இருக்கிறது .

மும்பை-பூனே நெடுஞ்சாலை

இந்தியாவின் போக்குவரத்தில் முன்னேற்றங்கள் பலவாக இருந்தாலும் கூட காலங்கடந்த அடிப்படை வசதிகளினால் இன்னும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது . இதனால் வருடம் தோறும எப்படியாவது பத்து விழுக்காடுகள் போக்குவரத்து பற்றாக்குறை ஏற்படுகிறது . கோல்ட்மன் சாச்ஸ் இன் கணக்குப்படி , பதினொன்றாம் ஐந்து வருட திட்டத்திற்கு இந்தியா 500 பில்லியன் டாலர்கள் பொருளாதார வளர்ச்சிகளுக்காகவும் அடுத்த கட்டமாக அடிப்படை வசதிகளை உருவாக்கும் செயற்றிட்டத்திற்காக 1.7 ட்ரில்லியன் டாலர்களையும் செலவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

வெகு தூர போக்குவரத்துகள்

தொகு

இரயில்வே

தொகு
 
டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே ஒரு உலக பாரம்பரிய தலமாகும் [1]

தொடர்வண்டியானது இந்தியாவில் முதலில் 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப் படுகிறது. இரயில் போக்குவரத்தானது இந்திய இரயில்வே என்ற அரசு நிறுவனத்தினால் ஆளப்படுகிறது. இரயில் பாதைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. இதன் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்கள் ஆகும்.இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும்.

இது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mountain Railways of India". யுனெசுகோ World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.