சாங்கி சர்வதேச விமான நிலையம், சிங்கப்பூர்.
சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம். (ஆங்கிலம்: Singapore Changi Airport, மலாய்: Lapangan Terbang Changi Singapura, சீனம்: 新加坡樟宜机场, பின்யின்: Xīnjiāpō Zhāngyí Jīchǎng) சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான விமான நிலையம் ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில வானூர்தி தொண்டு நிறுவனங்கள் இவ்விமான நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும். இது 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளுக்கான சிறந்த விமான நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Singapore govt to put Changi Airport under Temasek". Reuters. 7 October 2008.
- ↑ "Changi Airport Group". Changi Airport Group. Ministry of Finance of Singapore. Archived from the original on 27 March 2021. பார்க்கப்பட்ட நாள் 27 March 2021.
- ↑ "FedEx opens flagship Asia hub". Singapore's Changi Airport. Aircargonews.net. Archived from the original on 1 August 2015. பார்க்கப்பட்ட நாள் 5 October 2012.