வலைவாசல்:மருத்துவம்/சிறப்புப் படம்/2
வெண்குருதியணுக்களின் வகைகளில் ஒன்றான பெருவிழுங்கிகள் சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. ஒரு பெருவிழுங்கி நோய்க்காரணியை உள்ளெடுக்கும் படிமுறையை இப்படம் காட்டுகின்றது.
a. விழுங்குதல் மூலம் உள்ளெடுத்தல், இதன்போது ஒரு தின்குழியவுடல் உருவாகும் (phagosome)
b. பிரியுடலுடன் (Lysosome), தின்குழியவுடல் இணைந்து தின்குழியப்பிரியுடல் (phagolysosome) உருவாகும்; நோய்க்காரணியானது நொதியங்களால் உடைக்கப்படும்.
c. கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படும் அல்லது தன்மயமாக்கப்படும் (c. படத்தில் காட்டப்படவில்லை)
பகுதிகள்:
1. நோய்க்காரணிகள்
2. தின்குழியவுடல்
3. பிரியுடல்கள்
4. கழிவுப் பொருட்கள்
5. குழியமுதலுரு
6. கல மென்சவ்வு