வலைவாசல்:மின்னணுவியல்/சிறப்புக்கட்டுரை

தொடுதிரையைப் பயன்படுத்தி ஒரு குழந்தை கணினிப்படுத்தியப் புதிரைச் சுளுவுகிறது.

தொடுதிரை (Touchscreen) என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி (electronic visual display) ஆகும். இச்சொல் பொதுவாக கருவிகளின் படங்காட்டிகளை (display) விரலால் தொடுவதையே குறிப்பன. தொடுதிரைகள், ஒயிலாணி (stylus pen) போன்ற பிற பட்டுவ பொருட்களையும் (passive objects) உணர கூடியன. தொடுதிரைகள் கும்மாள பொருட்கள் (game consoles), முழுக் கணினிகள் (all-in-one computers), கைக் கணினிகள், மற்றும் நுண்ணறி பேசிகள் போன்ற கருவிகளில் பொதுவாகிவிட்டன.