வலைவாசல்:மெய்யியல்/இந்தவாரத் தத்துவஞானி/2
பிளேட்டோ பெரும் செல்வாக்கு பெற்ற பண்டைய கிரேக்க மெய்யியலாளர் ஆவார்; சாக்கிரட்டீசின் சீடர்; பல மெய்யியல் உரையாடல்களின் ஆசிரியர், மற்றும் அரிசுட்டாட்டில் பயின்ற கல்விக்கூடத்தை ஏதென்சில் நிறுவியவர். பிளேட்டோ அக்கல்விக்கூடத்தில் பெருவாரியான உரைகளை நிகழ்த்தினார், பல மெய்யியல் துறைகளில், குறிப்பாக அரசியல், அறவியல், மீவியற்பியல், மற்றும் அறிவாய்வியல் போன்றவைக் குறித்து எழுதினார். பிளேட்டொவின் எழுதியவற்றுள் அவரது உரையாடல்களே மிக முக்கியமானவை. பிளேட்டோவின் அனைத்து உண்மையான மூல உரையாடல்களும் இன்றளவும் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
பிளேட்டோவின் உரையாடல்களில் பெரும்பாலும் சாக்கிரட்டீசு ஒரு பாத்திரமாக இடம்பெறும். சாக்கிரட்டீசு தாமாக எதனையும் எழுதாத காரணத்தால், அவற்றுள் எத்தனை சாக்கிரட்டீசுடையவை, எத்தனைப் பிளேட்டோவினுடையவை என்பதில் தீவிர கருத்து வேறுபாடு உண்டு. இதனையே "சாக்கிரட்டீசியச் சிக்கல்" என்பர். எனினும் சாக்கிரட்டீசின் போதனைகளின் தாக்கம் பிளேட்டோவிடம் சந்தேகத்திற்கிடமின்றி உள்ளது. அதனால் குறைந்தது பிளேட்டொவின் ஆரம்பக்காலப் படைப்புகளாவது கடன் வாங்கியவையும் தழுவல்களுமே...