வலைவாசல்:மெய்யியல்

மெய்யியல் வலைவாசல்
தமிழில் விக்கிப்பீடியாவின் மெய்யியல் வலைவாசல் வளங்களும், கட்டுரைகளும்.

மெய்யியல்

மெய்யியலை உருவகப்படுத்த அடிக்கடி பயன்படுத்தப்படும், ஆகுஸ்ட் ரொடான் வடித்த, சிந்தனையாளர் சிலை

குறைந்தது இரு பொருள்களில் மெய்யியல் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. முறையாகப் பொருள்கொண்டால் மெய்யியல் என்பது மீவியற்பியல், ஏரணம், நன்னெறி, அறிவாய்வியல், மற்றும் அழகியல் ஆகிய துறைகளை மையப்படுத்தும் ஓர் அறிவுசார் தேடல். பரவலான இளகுவான பொருள்படி, மெய்யியல் என்பது, மனிதம்-சார் இருப்பியல் கேள்விகளைக் களைவதை மையப்படுத்தும், ஒரு வாழ்வு முறை. இக்கேள்விகளுக்கு விடைதேடும் விதத்தில் (ஆன்மிகம், தொன்மவியல் போன்ற) பிற வழிகளினின்றும் மெய்யியல் வேறுபடுவது, அதன் முறையான திறனாயும் அணுகுமுறையாலும், காரண-காரிய அடிப்படையிலான பகுத்தறிவு தர்க்கங்களைச் சார்ந்திருப்பதாலும் ஆகும்.

மெய்யியலானது இருப்பு, அறிவு, நன்னெறிகள், பகுத்தறிவு, மனம், மற்றும் மொழி ஆகியவை குறித்த பொதுவான பரந்த ஆய்வைக் குறிக்கும். மெய்யியலைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான "philosophy (ஃபிலாசஃபி)", "ஞானப் பற்று" அல்லது "அறிவு மீது பற்று" என்று பொருள் தரும் φιλοσοφία (ஃபிலோசாஃபியா) என்ற கிரேக்க சொல்லில் இருந்து பெறப்பட்டது.

தேர்ந்தெடுத்த கட்டுரை (இன்றையவற்றைக் காண, பின்னர் திரும்பவும்.)

உங்களுக்குத் தெரியுமா...

செய்திகளில்

பாதொ

சிறப்புச் சித்திரம் (இன்றையவற்றைக் காண, பின்னர் திரும்பவும்.)

மெய்யியல் கல்விக் கிளைகள்

மெய்யியல், மனிதத்தால் எழுப்பப்படும் அடிப்படை கேள்விகளைச் சிந்தித்தாய்கிறது. இக்கேள்விகள் நாளுக்கு நாள் பெருகி மெய்யியலின் பல தொடர்புடைய கிளைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன:
  • அழகியல்: எது கலை? எது அழகு? சுவைக்கென்றொரு நியமம் உண்டா? கலை பொருளுடையதா? எனில் அது என்ன? சீறிய கலை எது? "கலை கலைக்காக"வா அல்லது வேறு நோக்கத்திற்குப் பயனாய் அமைவதா? கலையுடன் நம்மை பிணைப்பது எது? எவ்வாறு கலை நம்மைப் பாதிக்கிறது? சில கலைகள் நெறியற்றவையா? கலையால் ஒரு சமூகத்தை சீரழிக்கவோ செம்மைபெறவோ செய்ய இயலுமா?
  • அறிவாய்வியல்: அறிவின் தன்மையும் எல்லைகளும் யாவை? மனித இருப்பிற்கு எது அடிப்படை, அறிதலா, உய்த்தலா? நாம் அறிந்துள்ளவற்றை எவ்வாறு கற்றோம்? அறிவின் வரம்புகளும் பரப்பும் எவை? (இயலுமாயின்) வேறு மனங்கள் உண்டென எவ்வாறு அறிவது? (இயலுமாயின்) வேறு உலகை எவ்வாறு அறிவது? நம் விடைகளுக்கு எவ்வாறு சான்று வழங்குவது? உண்மைக் கூற்று என்பது எது?
  • நன்னெறி: செயல்கள், கொள்கைகள், நிறுவனங்களுள் நல்லறம் சார்ந்தவை, தீயறம் சார்ந்தவை என்ற பாகுபாடு உண்டா? எனில் அவை யாவை? நல்லறச் செயல்கள் யாவை, தீயவை எவை? ஆன்மிக இறை கட்டளைகள் அறச்செயல்களை அறமாக்குவனவா, அல்லது அறம் வேறெதனின் அடிப்படையாகத் தோன்றுவதா? அற நியமங்கள் அறுதியிடக் கூடியவையா அல்லது பண்பாடுகளைப் பொருத்தவையா? எப்படி வாழ வேண்டும்? மகிழ்ச்சியானது எது?
  • ஏரணம்: நல்ல வாதம்/தர்க்கம் எதனால் விளையும்? சிக்கலான வாதங்களை எவ்வாறு திறனாய்ந்து அறிவது? நல்ல சிந்தனை எதனால் விளையும்? ஏதேனும் பொருள்படவில்லை என்று எப்போது கருதுவது? ஏரணத்தின் மூலம் எது?
  • மீவியற்பியல்: எவ்வகையான பொருட்கள் இருக்கின்றன? அப்பொருட்களின் பண்புகள் என்னென்ன? நம் புலனுக்கு அப்பாற்பட்டு தனித்திருக்கும் பொருட்களும் உண்டா? காலம் மற்றும் தொலைவின் பண்புகள் யாவை? மனத்திற்கும் உடலிற்குமான உறவு என்ன? ஒரு நபராகத் திகழ்வதென்றால் என்ன? உணர்வுடனிருத்தல் என்றால் என்ன? கடவுட்கள் உண்டா?
  • அரசியல் தத்துவம்: அரசியல் நிறுவனங்களும் அவை கையாளும் அதிகாரமும் நீதியானவையா? நீதி என்றால் என்ன? அரசாங்கத்திற்கு ஒரு சரியான/முறையான பங்கும் பரப்பும் உள்ளதா? மக்களாட்சிதான் சிறந்த ஆட்சிமுறை வடிவமா? ஒரு ஆட்சிமுறை அறநீதிப்படி நியாயப்படுத்தத் தக்கதா? ஒரு நாடு அறநீதி அல்லது சமயக் கோட்பாட்டின் விதிகளை கொள்கைகளை ஊக்குவிக்கலாமா? நாடுகள் போருக்குச் செல்லலாமா? பிற நாட்டில் வாழ்வோருக்கும் ஒரு நாடு கடமைப்பட்டுள்ளதா?

தொடர்புடைய கல்வித் துறைகள்

இந்தவாரத் தத்துவஞானி (பின்னர் திரும்பவும்.)

சேமிப்பீயின் தேக்கத்தைப் போக்க
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:மெய்யியல்&oldid=3913378" இலிருந்து மீள்விக்கப்பட்டது