வலைவாசல் பேச்சு:உள்ளடக்கங்கள்
அனைத்து உள்ளடக்கங்களையும் இணைக்க கோரிக்கை
தொகுஆங்கில விக்கிப்பீடியாவில் en:Portal:Contents என்பது விக்கிப்பீடியாவின் மொத்த உள்ளடக்கங்களின் தொகுப்பாக உள்ளது. ஆனால் இங்கு வலைவாசல் மட்டுமே காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அனைத்தையும் ஒருங்கினைத்தால் மிகவும் பயனுள்ளதாகவும், உள்ளடக்கங்கள் பற்றி விரைவாக அறியவும் இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:14, 11 சூலை 2013 (UTC)
Outline
தொகுபார்க்க - தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் --Natkeeran (பேச்சு) 13:33, 1 அக்டோபர் 2013 (UTC)
தத்துவம் - மெய்யியல்; புத்தகம் -> நூல்
தொகுதத்துவம், புத்தகம் போன்ற சொற்களுக்குப் பதிலாக மெய்யியல், நூல் போன்ற சொற்களே பொருத்தமான தமிழ்ச் சொற்களாகக் கொள்ளப்படுகின்றன. எனவே அவற்றைப் பயன்படுத்துவது கூடிய பொருத்தம் ஆகும். மேலும் ஆங்கில விக்கியில் உள்ளதை அப்படியே இங்கு படி எடுக்காமல், நாம் உருவாகும் போது வளர்த்துச் செல்வது பொருத்தமாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 13:35, 1 அக்டோபர் 2013 (UTC)
- தங்களுடைய வழிகாட்டலின்படியே தற்போது சிவப்பிணைப்புகளை மறைத்துள்ளேன். சரியான வடிவம் கிடைத்தும் அவற்றின் மூலத்தினை பக்கத்திலிருந்து நீக்கிவிடுகிறேன். வளருகின்ற தமிழ் விக்கியில் விரைவில் இப்பக்கம் இணைப்புகளால் நிரம்பட்டும். வழிகாட்டலுக்கு மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:09, 2 அக்டோபர் 2013 (UTC)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:09, 2 அக்டோபர் 2013 (UTC)
பகுப்பு:பட்டியல்கள்
தொகுபார்க்க: பகுப்பு:பட்டியல்கள் --Natkeeran (பேச்சு) 13:40, 1 அக்டோபர் 2013 (UTC)
சொற்கள்
தொகு- மேற்கோள் என்பதை விட உசாத்துணைகள் என்பதுவே இங்கு கூடப் பொருந்தும். Overviews - சுருக்கம் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அருஞ்சொற்பொருள் என்பதற்குப் பதிலாக நாம் கலைச்சொற்கள் என்பதையே பெரிதும் பயன்படுத்துகிறோம். --Natkeeran (பேச்சு) 16:16, 2 அக்டோபர் 2013 (UTC)
- Natural and Physical Sciences என்பதை physical sciences மற்றும் இயற்கை என்று மொழிபெயர்ப்பது தவறு ஆகும். Natural Science என்பது இயற்கை என்று பொருள் தராது. --Natkeeran (பேச்சு) 16:20, 2 அக்டோபர் 2013 (UTC)
- முகப்பு பக்கத்தில் தெளிவாக உரைத்துள்ளீர்கள். அவற்றை விரைவில் மாற்றிவிடுகிறேன். யாரேனும் உதவ முன்வரமாட்டார்களா என்று ஏங்கியிருந்தேன். தாங்கள் வந்தமை என் புண்ணியம். நன்றி. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:11, 2 அக்டோபர் 2013 (UTC)