வல்கேனைட்டு
வல்கேனைட்டு (Vulcanite) என்பது CuTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். தாமிர தெலூரைடு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. உலோகத்தன்மை பளபளப்பும் பச்சை அல்லது வெண்கல மஞ்சள் நிறமும் கொண்டதாக உள்ளது. மோவின் அளவுகோலில் வல்கேனைட்டின் கடினத்தன்மை அளவு 1 மற்றும் 2 எனக் கணக்கிடப்படுகிறது. மென்மையும் வழவழப்பும் மிக்க டால்க் மற்றும் பாரிசு சாந்து எனப்படும் கிப்சம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலையை இக்கடினத்தன்மை அடையாளப்படுத்துகிறது. செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது.
வல்கேனைட்டு Vulcanite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | தெலூரைடு கனிமம் |
வேதி வாய்பாடு | CuTe |
இனங்காணல் | |
நிறம் | வெளிரியது முதல் வெண்கல மஞ்சள் வரை |
படிக இயல்பு | பொதி, மணிகள், தொகுதிகள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
இரட்டைப் படிகமுறல் | பொது |
பிளப்பு | [hk0] நன்று, [h0l] தெளிவில்லை |
முறிவு | நேர்த்தியாக வெட்டலாம் |
மோவின் அளவுகோல் வலிமை | 1 - 2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.1 |
பலதிசை வண்ணப்படிகமை | வலிமையானது, பிரகாசமான மஞ்சள் முதல் சாம்பல் நீலம் வரை |
உருகுதன்மை | 1.5 |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
1961 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குன்னிசன் கொலராடோ மாகாணத்திலுள்ள வல்கேன் மாவட்டத்தில் அமைந்துள்ள குட் ஓப் சுரங்கத்தில் இக்கனிமம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட இடத்தின் பெயரே இக்கனிமத்திற்குப் பெயராகச் சூட்டப்பட்டது. சப்பான், உருசியா, சவுதி அரேபியா, நார்வே ஆகிய நாடுகளிலும் சிறிய படிவுகளாக வல்கேனைட்டு கண்டறியப்பட்டது. வெண்கந்தகம், இரிக்கார்டைட்டு, பெட்சைட்டு, சில்வேனைட்டு போன்ற கனிமங்களுடன் இயற்கையில் இது தோன்றுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் வல்கேனைட்டு கனிமத்தை Vul[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/vulcanite.pdf Handbook of Mineralogy
- ↑ http://webmineral.com/data/Vulcanite.shtml Webmineral
- ↑ http://www.mindat.org/min-4213.html Mindat
- ↑ https://www.mineralienatlas.de/lexikon/index.php/MineralData?mineral=Vulcanite Mineralienatlas
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.