இரிக்கார்டைட்டு

இரிக்கார்டைட்டு (Rickardite) என்பது Cu7Te5[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். Cu3-x (x = 0 to 0.36)Te2 [2] என்ற பொது வாய்ப்பாட்டையும் இக்கனிமத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் குன்னிசன் கொலராடோ மாகாணத்திலுள்ள வல்கேன் மாவட்டத்தில் அமைந்துள்ள குட் ஓப் சுரங்கத்தில் இக்கனிமம் முதன்முதலாக கண்டறியப்பட்டது[3]. சுரங்கத்தின் பொறியாளர் தாமசு ஆர்தர் இரிக்கார்டு (1864–1953) நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. தாமசு இரிக்கார்டு இவருடைய சகோதரர் ஆவார்[1]. தாழ் வெப்பநிலையில் நீர்வெப்பக் கனிமமாகக் காணப்படும் இக்கனிமம் வல்கேனைட்டு, வெண்கந்தகம், கேமரோனைட்டு, பெட்சைட்டு, சில்வேனைட்டு, பெர்த்தியிரைட்டு, பைரைட்டு, ஆர்சனோபைரைட்டு, போர்னைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இயற்கையில் தோன்றுகிறது[2].

இரிக்கார்டைட்டு
Rickardite
தெலூரியத்தின் மீது இரிக்கார்டைட்டு
பொதுவானாவை
வகைதெலூரைடு கனிமம்
வேதி வாய்பாடுCu7Te5
இனங்காணல்
நிறம்செவ்வூதா (புதியது),
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மோவின் அளவுகோல் வலிமை3 12
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இரிக்கார்டைட்டு கனிமத்தை Rkd[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat
  2. 2.0 2.1 Handbook of Mineralogy
  3. Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிக்கார்டைட்டு&oldid=4128102" இலிருந்து மீள்விக்கப்பட்டது