வெண்கந்தகம்

வெண்கந்தகம் அல்லது தெலூரியம் (ஆங்கிலம்: Tellurium (IPA: /tiˈlʊəriəm, tɛ-/) என்பது பளபளப்பான வெண்சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு வேதியியல் தனிமம். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Te. இதன் அணுவெண் 52 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு பளபளப்பான வெண்சாம்பல் நிறத்துடன் வெள்ளீயம் போல் உள்ள, ஆனால் எளிதில் உடைந்து நொருங்கக்கூடிய தன்மை உடைய நொறுநொறுப்பான மாழையனை வகையைச் சேர்ந்த தனிமம். வெண்கந்தகம் வேதியியல் பண்புகளில் செலீனியம், கந்தகம் போன்றது. இது பெரும்பாலும் காலியம் ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களில் அதன் மின்கடத்துமை வகையை மாற்றும் மாசூட்டுப் பொருளாக பயன்படுகின்றது..

தெலூரியம்
52Te
Se

Te

Po
அந்திமனிதெலூரியம்அயோடின்
தோற்றம்
silvery lustrous gray
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் தெலூரியம், Te, 52
உச்சரிப்பு /t[invalid input: 'ɨ']ˈl[invalid input: '(j)']ʊəriəm/
te-LEWR-ee-əm
தனிம வகை உலோகப்போலி
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 165, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
127.60
இலத்திரன் அமைப்பு [Kr] 4d10 5s2 5p4
2, 8, 18, 18, 6
Electron shells of Tellurium (2, 8, 18, 18, 6)
Electron shells of Tellurium (2, 8, 18, 18, 6)
வரலாறு
கண்டுபிடிப்பு பிரான்ஸ்-ஜோசப் முல்லர் வான் ரெய்சென்ஸ்டெயின் (1782)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
மார்டின் ஹெயின்ரிச் கிலாப்ராத்
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 6.24 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 5.70 g·cm−3
உருகுநிலை 722.66 K, 449.51 °C, 841.12 °F
கொதிநிலை 1261 K, 988 °C, 1810 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 17.49 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 114.1 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 25.73 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K)     (775) (888) 1042 1266
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 6, 5, 4, 2, -2
(mildly காடிic oxide)
மின்னெதிர்த்தன்மை 2.1 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 869.3 kJ·mol−1
2வது: 1790 kJ·mol−1
3வது: 2698 kJ·mol−1
அணு ஆரம் 140 பிமீ
பங்கீட்டு ஆரை 138±4 pm
வான்டர் வாலின் ஆரை 206 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal[1]
தெலூரியம் has a hexagonal crystal structure
காந்த சீரமைவு diamagnetic[2]
வெப்ப கடத்துத் திறன் (1.97–3.38) W·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 2610 மீ.செ−1
யங் தகைமை 43 GPa
நழுவு தகைமை 16 GPa
பரும தகைமை 65 GPa
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.25
பிரிநெல் கெட்டிமை 180 MPa
CAS எண் 13494-80-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: தெலூரியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
120Te 0.09% >2.2×1016 y (β+β+) 1.701 120Sn
121Te செயற்கை 16.78 d ε 1.040 121Sb
122Te 2.55% - (SF) <30.974
123Te 0.89% >5×1019 y (ε) 0.051 123Sb
124Te 4.74% - (SF) <28.221
125Te 7.07% - (SF) <26.966
126Te 18.84% - (SF) <26.011
127Te செயற்கை 9.35 h β 0.698 127I
128Te 31.74% 2.2×1024 y ββ 0.867 128Xe
129Te செயற்கை 69.6 min β 1.498 129I
130Te 34.08% 7.9×1020 y ββ 2.528 130Xe
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
·சா

குறிப்பிடத்தக்க பண்புகள்

தொகு

வெண்கந்தகம், ஆக்ஸிஜன், கந்தகம், செலீனியம், பொலோனியம் அடங்கிய வேதியியல் குழுவை சேர்ந்த அருகியே கிடைக்கும் ஒரு தனிமம். இக்குழுவைச் சால்க்கோஜென் என்றும் அழைப்பர்.

பயன்பாடுகள்

தொகு

வரலாறு

தொகு

டெலூரியம் என்னும் சொல் இலத்தீன் மொழிச் சொல்லாகிய tellus (டெல்லஸ் = மண், நிலம்) என்ப்தைல் இருந்து ஆக்கியது. இத்தனிமத்தை 1782 ஆண்டில் அங்கேரியர் பிரான்சு-ஜோசெப் மியுல்லர் வான் ரைசஷென்ஸ்டைன் (Franz-Joseph Müller von Reichenstein) என்பார் சிபு என்னும் ஊரில் நாகிசேபென் என்னும் இடத்தில் கண்டுபிடித்தார். இவ்விடம் தற்காலத்தில் ருமானியா நாட்டின் நடு மேற்குப் பகுதியில் உள்ளது (இது டிரான்ஸ்சிலவேனியா என்னும் பகுதியைச் சார்ந்தது). 1789ல் பால் கிட்டைபெல் என்னும் இன்னொரு அங்கேரியர் இதே தனிமத்தை தானும் கண்டுபிடித்தார் ஆனால் முதலில் கண்டுபிடித்தப் பெருமையை மியுல்லருக்கே தந்தார். 1798ல் மார்ட்டின் ஹைன்ரிஷ் கிலாப்ரோத் ([Martin Heinrich Klaproth) இத்தனிமத்தை பிரித்தெடுத்து பெயர் சூட்டினார்.

வெண்கந்தகத்தை முதல் அணுகுண்டு செய்தபொழுது வெளிக்கூட்டுக்கு வேதிப்பிணைப்புப் பொருளாகப் பயன்படுத்தினர். 1960களில் வெப்பவேறுபாட்டால் மின்னாற்றல் பெறும் வெப்பமின்னாக்கிகளுக்குப் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. தெலூரியம், mindat.org
  2. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தெலூரியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கந்தகம்&oldid=3953320" இலிருந்து மீள்விக்கப்பட்டது