வல்லம் அங்காள பரமேசுவரி கோயில்
வல்லம் அங்காள பரமேசுவரி கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது.
மூலவர்
தொகுஇக்கோயிலிலுள்ள மூலவராக அங்காள பரமேசுவரி உள்ளார்.
அமைப்பு
தொகுகோயிலின் வாயிலின் இருபுறமும் முறையே விநாயகரும், முருகனும் உள்ளனர். அடுத்துள்ள மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், சிங்கம் ஆகியவை உள்ளன. அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக கணபதியும் முருகனும் இரு புறத்திலும் உள்ளனர். திருச்சுற்றில் நாக கன்னி அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து பாவாடைராயன், கருப்புசாமி, பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், காட்டேரியம்மன், நொண்டிக்கருப்பு, வெள்ளையம்மாள் மற்றும் பொம்மியம்மாளுடன் மதுரை வீரன் ஆகியோர் உள்ள சன்னதி உள்ளது. பத்ரகாளியம்மனுக்கும், காட்டேரியம்மனுக்கும் முன்பாக பலிபீடம் காணப்படுகிறது. கோயிலின் வாயிலை அடுத்துள்ள சிறிய சன்னதியாக பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளார். இதே சன்னதியில் வரதராஜப்பெருமாள் காணப்படுகிறார்.
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலில் 10 டிசம்பர் 1995 மற்றும் 10 பிப்ரவரி 2008இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன.