வல்லம் கோட்டை முனியாண்டவர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வல்லம் கோட்டை முனியாண்டவர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள கோயிலாகும்.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. வஜ்ஜிரேசுவரர் கோயிலுக்கு அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது.
இறைவன்
தொகுஇக்கோயிலிலுள்ள மூலவராக முனியாண்டவர் உள்ளார். மாடத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அருகில் அதிக எண்ணிக்கையில் சூலங்களும், வேல்களும் காணப்படுகின்றன. முனியாண்டவருக்குப் பின் பெரிய ஆலமரம் உள்ளது.
பிற சன்னதிகள்
தொகுமுனியாண்டவரின் வலது புறம் மதுரை வீரன் உள்ளார். இடது புறத்தில் கருப்புசாமி, அம்மன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மாடங்களில் காணப்படுகின்றனர்.