வல்லம் கோதண்டராமர் கோயில்

வல்லம் கோதண்டராமர் கோயில், தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள ராமர் கோயிலாகும்.

வல்லம் கோதண்டராமர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ராமர்

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது.

அமைப்பு

தொகு
 
மூலவர் விமானம்

இக்கோயில் நுழைவாயில், முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. முன்மண்டபத்தின் இரு புறங்களிலும் ராமர் பட்டாபிசேகம் மற்றும் தசாவதார ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கோயில் முகப்பில் மேல் புறம் ராமரும் சீதையும் அமர்ந்த நிலையிலிருக்க லட்சுமணனும், அனுமாரும் நின்ற நிலையில் உள்ள சுதைச்சிற்பம் காணப்படுகிறது.

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக ராமர் சீதை, இலக்குவனார் ஆகியோருடன் உள்ளார். மூலவர் கோதண்டராமர் என்றழைக்கப்படுகிறார்.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு 11 சூலை 2019 அன்று நடைபெற்றது. [1]

மேற்கோள்கள்

தொகு