வல்லம் சோளீஸ்வரர் கோயில்
வல்லம் சோளீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் வடக்குக் கடைவீதியில் உள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலிலுள்ள மூலவர் சோளீசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி.
அமைப்பு
தொகுநுழைவாயிலுக்கு மேல் இறைவனும் இறைவியும் விடைமீது அமர்ந்துள்ள நிலையிலான சுதை சிற்பம் உள்ளது. அடுத்துள்ள வாயிலில் இரு புறமும் விநாயகரும் முருகனும் உள்ளனர். அடுத்துள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வலப்புறம் விநாயகர் உள்ளார். இடப்புறம் பால தண்டாயுதபாணி உள்ளார். இந்த மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக ஒரு நந்தி உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக ஒரு நந்தி உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மூல விநாயகர், காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அடுத்து சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கோபுரத்தின் இடப்புறம், கோயிலின் உள்ளே நவக்கிரகங்கள், கால பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.
முருகன் கோயில்
தொகுஇக்கோயில் வளாகத்தில் மூலவர் சன்னதிக்கு ஈடாக சற்றொப்ப அதே நிலையில் முருகன் சன்னதி சிறிய கோயிலாகவே அமைந்துள்ளது. அந்த சன்னதியின் முன்பாக மயிலும், பலி பீடமும் காணப்படுகின்றன. அதற்கடுத்த மண்டபத்தின் முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் முருகன் உள்ளார்.