வல்லம் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில்

வல்லம் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள வைணவக்கோயிலாகும்.

நுழைவாயில்

அமைவிடம் தொகு

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் வஜ்ஜிரேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது.

சிறப்பு தொகு

விக்கிரம சோழ மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டதால் விக்கிரம சோழ விண்ணகரம் என்ற பெயர் பெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. நரசிம்மர் சன்னதியின் சிறப்பின் காரணமாக இக்கோயில் மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது.[1] கோயிலின் நுழைவாயிலுக்கு முன்பாக கோயில் வளைவு உள்ளது. மூலவர் சன்னதி விமானம் சற்று பெரிய அளவில் உள்ளது. திருச்சுற்றில் கொடி மரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. அவை மாதவப் பெருமாள் சன்னதியை நோக்கிய நிலையில் காணப்படுகின்றன.

அமைப்பு தொகு

 
கொடிக்கம்பம்

மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மர் உள்ளார். திருச்சுற்றில் ஆழ்வார் சன்னதிகளும், ஆண்டாள் சன்னதியும் உள்ளன. கோயிலுக்குக் கிழக்கே கௌதம தீர்த்தம் உள்ளது.[1] திருச்சுற்றில் ராகு, கேது சன்னதி, சக்கர கணபதி மற்றும் நர்த்தன கணபதி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, ராமர், சீதை, லட்சுமணர் சன்னதி, அய்யப்பன் சன்னதி, வாகுளாதேவி தாயார் சன்னதிகளும் காணப்படுகின்றன.ஆழ்வார் சன்னதியில் தேசிகன், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014