வல்லம் முத்துக்கண் மாரியம்மன் கோயில்

வல்லம் முத்துக்கண் மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலாகும்.

நுழைவாயில்

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் வடக்கு கடை வீதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகில் சோளீஸ்வரர் கோயில் உள்ளது.

மூலவர்

தொகு

இக்கோயிலிலுள்ள மூலவராக முத்துக்கண் மாரியம்மன் உள்ளார்.

அமைப்பு

தொகு
 
மூலவர் விமானம்

கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றது ஒரு மண்டபம் உள்ளது. முன்னதாக வடப்புறம் விநாயகரும்,இடப்புறம் முருகனும் உள்ளனர். மண்டபத்தில் பலி பீடம், சிங்கம் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் வலப்புறம் பேச்சியம்மன், துர்க்கையம்மன் சன்னதிகளும், இடது புறம் கருப்புசாமி, மதுரை வீரன் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. மூலவர் சன்னதியின் பின்புறம் கன்னி மூல கணபதி, பால தண்டாயுதபுணி, ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

குடமுழுக்கு

தொகு

இக்கோயிலில் 16 டிசம்பர் 2013இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது. அதே கல்வெட்டில் இங்கு அருகேயுள்ள பழனியாண்டவர் கோயிலும், ஏகௌரியம்மன் கோயிலும் அதே நாளில் குடமுழுக்கு ஆனதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு