வல்வைப்புயல்

வல்வைப்புயல் என்பது வல்வெட்டித்துறையில் 1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற ஸ்ரீலங்கா அரச முப்படைகளின் கொடூரமான கூட்டு இராணுவ நடவடிக்கையாகும். தொடர் குண்டுத் தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி மக்களை அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து ஒரே இரவில் வேரோடு இடம்பெயரச் சொல்லி விட்டு, அவர்கள் எழும்பி பாதுகாப்பான ஒரு இடத்தில் போய் இருப்பதற்கு முன்னரே கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றழித்தும், அவர்களின் பூர்வீகச் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவமாடிய இராணுவ நடவடிக்கையாகும்.

மிகமோசமாக சேதமாக்கப்பட்ட வல்வை வைத்தீஸ்வரன் ஆலயம்

கொல்லப்பட்டவர்கள் தொகு

 • 01. தி. நவரத்தினம் (வயது 32), தச்சுவேலை
 • 02. தவராசா (வயது 46), ஆதிகோயிலடி
 • 03. சிங்காரம் தில்லையம்பலம் (வயது 60), வாடி ஒழுங்கை
 • 04. இராஜேந்திரம் அன்பழகன் (வயது 40), ஆதிகோயிலடி
 • 05. திருமதி தங்கவேலாயுதம் நவரத்தினம் (வயது 65), ஆதிகோயிலடி
 • 06. செல்வி.சிவனேந்திரம் அன்புக்கரசி (வயது 8), ஆதிகோயிலடி
 • 07. பா.கஜனி (2மாதக் குழந்தை - தாய் ரமணி), வாடி ஒழுங்கை
 • 08. எஸ்.கந்தசாமி (வயது 70) இளைப்பாறிய தபால் அதிபர், நெடியகாடு
 • 09. திருமேனிப்பிள்ளை காஞ்சனாதேவி (வயது 24), அம்மன் கோயிலடி
 • 10. தண்டாயுதபாணி மகேஸ் (வயது 26), வேம்படி
 
அழிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான வல்வை சிவகுரு வித்தியாசாலை
 
இராணுவ குண்டுவீச்சில் படுகாயம் அடைந்த சிறுமி

படுகாயமடைந்தவர்கள் தொகு

 • 01. செல்வி.மயூரேசமூர்த்தி கௌரி (வயது 16), மாணவி
 • 02. திருமதி.வனஜா சிவனேசன் ( வயது 31), ஆசிரியை, அம்மன் கோயிலடி
 • 03. பொன்னுச்சாமி பாலசுப்பிரமணியம் (வயது 69), இளைப்பாறிய சித்திர ஆசிரியர்
 • 04. ச. ஞானவேல் (வயது 51), நிர்வாக அதிகாரி ,நெல்லியடி அபிவிருத்திச் சபை அலுவலகம், காங்கேசன்துறை வீதி
 • 05. சுப்பிரமணியராசா சண்முகராஜா (வயது 48), ஊரிக்காடு
 • 06. திருமதி. மகோற்கடமூர்த்தி பரமெஸ்வரி (வயது 54), தெணியம்பை
 • 07. நடனசிகமணி புவனேஸவரராஜா (நாகேஸ் வயது 26), ஸ்ரீ முருகன் குடியேற்றம்
 • 08. உத்தமசீலன் செல்வகுமார் (வயது 23), ஊறணி
 • 09. திருமதி. தங்கராணி ஜெயராணி (வயது 28), ஆதிகோயிலடி
 • 10. திருமதி. கந்தசாமி இராஜேஸ்வரி (வயது 48), கொத்தியால்
 • 11. கந்தசாமி சிவசுப்பிரமணியம் (வயது 26), ஆதிகோயிலடி

பாதிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் தொகு

 • 01. பா. குமார ஸ்ரீதரன், ஆசிரியர்
 • 02 சு. சக்திவடிவேல், ஆசிரியர்
 • 03. திருமதி. வனஜா சிவனேசன், ஆசிரியை
 • 04. செ. யோகச்சந்திரன், அதிபர்

சேதமாக்கப்பட்ட வணக்கத் தலங்கள் தொகு

 • 01. வல்வை வைத்தீஸ்வரர் கோயில்
 • 02. வல்வை முத்துமாரியம்மன் கோயில்
 • 03. ஆதி வைரவர் கோயில்
 • 04. புட்கரணிப் பிள்ளையார் கோயில்
 • 05. கப்பலுடையவர் கோயில்
 • 06. வயலூர் முருகன் கோயில்
 • 07. புனித செபஸ்தியார் தேவாலயம்

சேதமாக்கப்பட்ட கல்விக் கூடங்கள் தொகு

 • 01. வல்வை சிவகுரு வித்தியாலயம்
 • 02. வல்வை மகளிர் மகாவித்தியாலயம்
 • 03. வல்வை சிதம்பரக் கல்லூரி
 • 04. வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
 • 05. வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஸ் தமிழ் கலவன் பாடசாலை
 • 06. வல்வைக்கல்வி மன்றம்

சேதமாக்கப்பட்ட அரச அலுவலகக் கட்டிடங்கள் தொகு

 • 01. வல்வை நகராட்சி மன்றக் கட்டடம்
 • 02. வல்வெட்டித்துறை பொது நூலகம்
 • 03. அஞ்சல் அலுவலகம்
 • 04. வல்வெட்டித்துறை தெற்கு கிராம சேவகர் அலுவலகம், வீடு

தகவல் தொகு

ஓப்பரேசன் வல்வைப் புயல் - வல்வை ஆனந்தன் (உதயன் பத்திரிகையில் வெளியான தொடர் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்வைப்புயல்&oldid=3955310" இலிருந்து மீள்விக்கப்பட்டது