வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில்

அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் வளசரவாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4] இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் ஆவர். இறைவி திரிபுரசுந்தரி தாயார் ஆவார். மேலும், இக்கோயிலின் தலவிருட்சம் வன்னி மரம் மற்றும் தீர்த்தம் சுக்ர தீர்த்தம் ஆகும்.

வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில்
வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில்
வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில், வளசரவாக்கம், சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°02′29″N 80°10′39″E / 13.041465°N 80.177610°E / 13.041465; 80.177610
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:வளசரவாக்கம்
சட்டமன்றத் தொகுதி:மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:57 m (187 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி தாயார்
குளம்:சுக்ர தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி, நவராத்திரி, இராம நவமி, ஆனித் திருமஞ்சனம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன
வரலாறு
அமைத்தவர்:குலோத்துங்க சோழன்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°02′29″N 80°10′39″E / 13.041465°N 80.177610°E / 13.041465; 80.177610 ஆகும்.

அகத்தீசுவரர் சன்னதி, வேள்வீசுவரர் சன்னதி, திரிபுரசுந்தரி சன்னதி, கோதண்டராமர் சன்னதி, வினை தீர்த்த விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதி, கருமாரி அம்மன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, நவக்கிரக சன்னதி, பைரவர் சன்னதி ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Ganesh (2018-12-25). "Sri Velveeswarar Temple- Valasaravakkam" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  3. தினத்தந்தி (2022-06-30). "தமிழகத்தில் ரூ.2,800 கோடி கோவில் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  4. "VALASARAVAKKAM VELVEESWARAR TEMPLE" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  5. "Arulmigu Agatheeswarar &Velveeswarar Temple, Valasaravakkam, Chennai - 600087, Chennai District [TM000117].,Sivan,Ambal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.

வெளி இணைப்புகள் தொகு