வளன் அரசு
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்
வளன் அரசு (பிறப்பு: மே 15, 1940) திருநெல்வேலி - பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் தமிழ் எழுத்தாளருமாவார். இவர் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான கத்தோலிக்கப் பேரவைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஆசிரியப் பணி
தொகு- திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் (1960-61)
- பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் (1963-67)
- பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் (1967-97)
- பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் (2001-10)
குடும்பம்
தொகு- மனைவி: ம.செயராணி, தமிழ்க்கலை முதுவர்
- மக்கள் : எழுவர் - ஆண்கள் நால்வர், பெண்கள் மூவர்.
எழுதிய நூல்கள்
தொகு- கட்டுரைக் களஞ்சியம்(1972)
- நாடும் ஏடும் (1974)
- வீரமாமுனிவர் ஒரு விளக்கம் (1980)
- பாரதியின் புலமை நலம் (1982)
- துறைதோறும் திரு.வி.க. (1983)
- தேம்பாவணித் திறன் (1988)
- விவிலியக் கருத்தரங்கம் (1993)
- தமிழ் நெஞ்சங்கள் (1994)
- தமிழகப் புலவர்குழு அணியும் பணியும் (1995)
- வாழ்க்கை விடியல் திருக்குறள் (2000)
- வழிகாட்டும் வள்ளுவம் (2003)
- திருக்குறள் விளக்கம் (2005)
- திருக்குறள் ஆய்வுக் களஞ்சியம்(2005)
- பன்முகத் தமிழ் (2006)
- வண்டமிழ்த்தொண்டர் பெருமக்கள் (2006)
- கிறித்தவத் தமிழ்ச் சான்றோர் (2009)
பெற்ற விருதுகள்
தொகு- தமிழக அரசின் திருவள்ளுவர் விருது (2011)
- அருண்மொழிச்செல்வர் - தமிழ்நாட்டு நல்வழி நிலையம்,சென்னை (1974)
- திருக்குறள் நெறித் தோன்றல் - தமிழக அரசு (1985)
- தமிழ்மாமணி - உலகத் தமிழ்க் கிறித்தவப் பேரவை, சென்னை (1986)
- திருக்குறள் சான்றோர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், மதுரை (2001)
- மூத்த தமிழ் அறிஞர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (2010)
போன்ற நாற்பத்தைந்திற்கும் அதிகமான விருதுகள்
சாதனைகள்
தொகு- புலவர்கள் இருநூற்று ஐம்பதின்மரை உருவாக்கியவர்
- இளமுனைவர் இருபதின்மரை வழிநடத்தியவர்
- முனைவர் பட்டப்பேற்றுக்குப் பதின்மரின் நெறியாளர்
- பதினாறு நூல்களின் ஆசிரியர்
- நாற்பது ஆண்டுகளாகத் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியன நடத்தி வருபவர்.
- பாளையங்கோட்டை மாநிலத்தமிழ்ச்சங்கத்தின் இணைச்செயலாளராகக் கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கியக்கூட்டங்கள்
- உலகத்திருக்குறள் மையத்தின் தென்மண்டிலப் பொறுப்பாளராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களைத் "திருக்குறள் செல்வர்" பட்டம் பெற வைத்தவர்.
- திருநெல்வேலியில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் உருவாக அயராது பாடுபட்டவர்களுள் முதன்மையானவர்.