வளரும் விதை உவமை
வளரும் விதை இயேசு கூறிய ஓர் உவமானக் கதையாகும். இது விவிலியத்தில் மாற்கு 4:26-29 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விண்ணரசைப் பற்றியதாகும். இவ்வுவமையின் கருத்துப்பற்றி பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உவமை
தொகுசரியான காலத்தில் ஒருவர் தனது தோட்டதில் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகுவெளியிணப்புகள்
தொகு- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2006-10-07 at the வந்தவழி இயந்திரம் உவமைகள்