வளர்ச்சிமானி

தாவரங்களின் வளர்ச்சி வீதத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி

.

தாவர வளர்ச்சிமானி

வளர்ச்சிமானி (Auxanometer), என்பது தாவரங்களின் வளர்ச்சி வீதத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். கிரேக்க மொழியில் ஆக்சாயின் என்ற சொல்லுக்கு வளர்ச்சி என்றும் மீட்ரான் என்ற சொல்லுக்கு அளவிடுதல் என்றும் பொருளாகும்.[1][2]

வில் வளர்ச்சிமானி

தொகு

வில் வளர்ச்சிமானியில் கம்பியின் ஒருமுனை தாவரத்தின் நுனிப்பகுதியிலும் மற்றொருமுனை வில்லுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பியானது ஒரு கப்பியினுள் செல்லுமாறு பொருத்தப்பட்டு அந்தக்கப்பியில் ஒரு சுட்டிக்காட்டி இணைக்கப்பட்டுள்ளது. தாவரத்தின் உயரம் அதிகரிக்கும்போது கப்பி சுழல்வதால் சுட்டிக்காட்டி வட்ட அளவுகோல் வழியாக நகர்ந்து தாவரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது. வளர்ச்சி விகிதம் என்பது வளர்ச்சிமானியால் அளவிடப்பட்ட வளர்ச்சியின் நீளத்தை நேரத்தால் வகுப்பதன் மூலம் பெறப்பட்ட அளவீடு ஆகும். [3]

உணர்திறன் வளர்ச்சிமானி

தொகு

உணர்திறன் வளர்ச்சிமானி தாவரங்களின் நுண்ணிய வளர்ச்சியை மைக்ரோமீட்டர் அளவுக்கு நுண்ணிய அளவுகளை அளவிடப் பயன்படுகிறது. [4] வளிமண்டல அமைப்பில் ஏற்படும் குறுகியகால மாற்றங்களையும் இதன்மூலம் தாவரங்களில் ஏற்படும் துலங்கல்களையும் அளவிட உதவுகிறது. [5]

பயன்பாடு

தொகு

ஆய்வகங்கள்[5], களப்பயன்பாடுகள்[6] மற்றும் வகுப்பறைகளில்[7] வளர்ச்சிமானிகள் பயன்படுகின்றன. வளர்ச்சிவில்காட்டி என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1.    "Auxanometer". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 
  2. W. T. Bovie; W. T. Bovie (1915), "A Simplified Precision Auxanometer", American Journal of Botany, 2 (2): 95–99, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2435215, JSTOR 2435215{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. வார்ப்புரு:NSRW Cite
  4. Bovie, W. T. (1912), "A Precision Auxanometer", Botanical Gazette, 53 (6): 504, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/330848
  5. 5.0 5.1 Ranson, S. L.; Harrison, A. (1955), "Experiments on Growth in Length of Plant Organs", Journal of Experimental Botany, 6: 75, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/jxb/6.1.75
  6. Gallagher, J. N.; Biscoe, P. V.; Saffell, R. A. (1976), "A Sensitive Auxanometer for Field Use", Journal of Experimental Botany, 27 (4): 704, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/jxb/27.4.704
  7. W. T. Bovie; W. T. Bovie (1915), "A Simplified Precision Auxanometer", American Journal of Botany, 2 (2): 95–99, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2435215, JSTOR 2435215{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்ச்சிமானி&oldid=2992150" இலிருந்து மீள்விக்கப்பட்டது