வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்
வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் (Emerging Sources Citation Index-ESCI) என்பது 2015ஆம் ஆண்டு முதல் தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்போது கிளாரிவேட் மூலம் வெளியிடப்படும் மேற்கோள் குறியீட்டெண் ஆகும். வெளியீட்டாளரின் கூற்றுப்படி, குறியீட்டில் "பிராந்திய முக்கியத்துவம் மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறைகளின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடுகள்" அடங்கும்.[1]
Producer | கிளாரிவேட் (கனடா & ஆங்காங்) |
---|---|
History | 2015-முதல் |
Coverage | |
Disciplines | பல்வேறு துறை சார்ந்தது |
Geospatial coverage | உலகம் முழுவதும் |
Links | |
Website | clarivate |
வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் மற்ற கிளாரிவேட் குறியீடுகளுடன் அறிவியல் வலை மூலம் அணுகப்படுகிறது.[2][3] சூன் 2021 நிலவரப்படி, வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்ணில் குறியிடப்பட்ட அனைத்து ஆய்விதழ்களும் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்விதழ்கள் தாக்கக் காரணியைப் பெறவில்லை என்றாலும், இவை பிற இதழ்களின் தாக்கக் காரணிகளைக் கணக்கிடுவதற்கு மேற்கோள்களை வழங்குகின்றன.[4][5]
சேர்த்தல் அளவுகோல்கள்
தொகுவளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்ணில் ஆய்விழைச் இணைக்க, ஆய்விதழ்கள் கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.[6]
- சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்கள்
- வெளியீட்டு நெறிமுறை நடைமுறைகளைப் பின்பற்றுதல்
- தொழில்நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்தல்
- ஆங்கில நூலியல் தகவல்
- அறிவியல் வலை பயனர்களின் அறிவார்ந்த பார்வையாளர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும் அல்லது கோரப்பட வேண்டும்
திறனாய்வு
தொகுஜெப்ரி பீல், கிளாரிவேட் தயாரித்த தரவுத்தளங்களில், வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் இணைவது மிகவும் எளிதானது என்றும், இதன் விளைவாகப் பல ஏமாற்று ஆய்விதழ்கள் உள்ளன என்றும் வாதிட்டார்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ESCI Fact Sheet" (PDF). Clarivate. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
- ↑ Web of Science platform (2015). "Available databases A to Z". Clarivate Analytics.
- ↑ Francisco J. Cantu-Ortiz: Research Analytics
- ↑ "Web of Science Journal Evaluation Process and Selection Criteria". Web of Science Group. 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
- ↑ Somoza-Fernández, Marta; Rodríguez-Gairín, Josep-Manuel; Urbano, Cristóbal (2018-02-12). "Journal coverage of the Emerging Sources Citation Index". Learned Publishing 31 (3): 199–204. doi:10.1002/leap.1160.
- ↑ "Emerging Sources Citation Index". Taylor & Francis. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
- ↑ Beall, Jeffrey (28 April 2016). "The TR Master Journal List is not a Journal Whitelist". Scholarly Open Access. WordPress.com. Archived from the original on 2017-01-09. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
- ↑ Beall, Jeffrey (28 January 2016). "Bogus Iran-Based Journal Allows Up to 40% Plagiarism". Scholarly Open Access. WordPress.com. Archived from the original on 2016-11-13. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.