வளையத்தூர் வளவநாதீசுவரர் கோயில்

வளையத்தூர் வளவநாதீசுவரர் கோயில் என்பது வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே வளையத்தூரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இந்த சிவாலயத்தின் மூலவர் வளவநாதீசுவரர் என்றும், அம்பாள் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

வளையத்தூர் வளவநாதீசுவரர் கோயில்
பெயர்
பெயர்:வளையத்தூர் வளவநாதீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:வளையத்தூர்
மாவட்டம்:வேலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வளவநாதீசுவரர்
தாயார்:பெரியநாயகி

இத்தலத்தில் மூலவர் சதுர் பீடத்தில் இடதுபுறத்தில் சிறிது சாய்ந்தவாறு உள்ளார். அதனால் இவரை நவாம்ச மூர்த்தி என்கின்றனர். மூலவர் சன்னதிக்கு வாசல் இல்லை. கல்ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது.

அம்பாள் பெரியநாயகி நெற்றிக் கண்ணோடு உள்ளார். இவரது நான்கு கைகளிலும் உள்ள சுண்டுவிரல்களில் மோதிரம் உள்ளது. அம்பாள் சிவபெருமானுக்குரிய சின்முத்திரையை காட்டியவாறு உள்ளார். அம்பாளை சிவனாக கருதி சிவராத்திரியில் பூசை செய்கின்றார்கள்.

விழாக்கள்

தொகு
  • கார்த்திகையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
  • சிவராத்திரியில் அம்பிகையை சிவனாக நினைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

சிறப்பு

தொகு
  • அம்பிகையே இங்கு சிவனாக கருதப்படுகிறார்
  • சப்த கன்னியர்கள் வாகனங்களுடன் உள்ளார்.

சன்னதிகள்

தொகு

மூலவர் சந்நதி முன்பில் நின்படி இருக்கும் படி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சண்முகர் உள்ளார்.

ஆதாரங்கள்

தொகு
  1. ஆன்மீகம் இதழ் 1-15 மார்ச் 2016 மோதிரம் அணிந்த சிவன் கட்டுரை