வாக்குவாதம்
வாக்குவாதம் அல்லது வாதம் (argument) என்பது வாக்கியங்கள், அறிக்கைகள் அல்லது முன்மொழிவுகளின் தொடர் ஆகும், அவற்றில் சில மூலக்கூற்று என்றும் முடிவு என்றும் அழைக்கப்படுகின்றன.[1] ஒரு வாதத்தின் நோக்கம் நியாயப்படுத்துதல், விளக்கம் மற்றும்/அல்லது தூண்டுதல் மூலம் ஒருவரின் முடிவுக்குk காரணங்களை வழங்குவதாகும்.
வாதங்கள் என்பது ஓர் அறிக்கையின் உண்மை அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையின் அளவைத் தீர்மானிக்கும் நோக்கம் கொண்டதாகும்.[2][3] இது, மூன்று முக்கிய கண்ணோட்டங்களில் இருந்து ஆய்வு செய்யப்படலாம். அவையாவன, ஏரண ரீதியில், இயங்கியல் மற்றும் சொல்லாட்சிக் கண்ணோட்டம்.[4]
சொற்பிறப்பியல்
தொகுஇலத்தீனின் மூலச் சொல்லான arguere என்பது (பிரகாசமான, அறிவொளியூட்டுதல், அறியச் செய்தல், நிரூபித்தல் போன்றவை இதன் பொருளாகும்) புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியச் சொற்களான argu-yo-, பின்னொட்டு வடிவமான arg- (பிரகாசம் வெள்ளை) என்பதிலிருந்து உருவானது.[5]
வாத வகைகளின் நிலையான தர்க்கரீதியான கணிப்பு
தொகுதர்க்கத்தில் பல வகையான வாதங்கள் உள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமானவை "பகுப்பாய்வு" மற்றும் "தூண்டல்" ஆகும். ஒரு வாதத்திற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முலக்கூற்றுகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு முடிவு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறும் முடிவும் உண்மையைத் தாங்குபவர்கள் அல்லது "உண்மை வேட்பாளர்கள்" எனப்படும், ஒவ்வொன்றும் உண்மை அல்லது பொய்யானதாக இருக்க முடியும் (ஆனால் இரண்டாகவும் இருக்க இயலாது). இந்த உண்மை மதிப்புகள் வாதங்களுடன் பயன்படுத்தப்படும் சொற்களைக் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sinnott-Armstrong, Walter; Fogelin, Robert J. (2015). Understanding arguments: an introduction to informal logic. Cengage advantage books (9 ed.). Australia; Brazil; Mexico; Singapore; United Kingdom; United States: Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-285-19736-4.
- ↑ Ralph H. Johnson, Manifest Rationality: A pragmatic theory of argument (New Jersey: Laurence Erlbaum, 2000), 46–49.
- ↑ This is called "argument-as-product", distinguished from "argument-as-process" and "argument-as-procedure." Wenzel, J. W. (1987). The rhetorical perspective on argument. In F. H. van Eemeren, R. Grootendorst, J. A. Blair, & C. A. Willard (Eds.), Argumentation. Across the lines of discipline. Proceedings of the conference on argumentation 1986 (pp. 101–109). Dordrecht-Providence: Foris.
- ↑ Wagemans, Jean H. M. (2021-12-02), Stalmaszczyk, Piotr (ed.), "The Philosophy of Argument", The Cambridge Handbook of the Philosophy of Language (1 ed.), Cambridge University Press, pp. 571–589, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/9781108698283.032, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-69828-3, பார்க்கப்பட்ட நாள் 2022-05-02
- ↑ Harper, Douglas "Argue".. MaoningTech.