வாங்குவோர் கழிவிரக்கம்
ஒன்றை வாங்கியபின், ஏற்படும் வருத்த உணர்வே வாங்குவோர் கழிவிரக்கம் (Buyer's Remorse) எனப்படுகிறது. இது பொதுவாக மிக விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதுடனே அதிகமாக சம்பந்தப்படுகிறது. இதற்கான பொதுவான காரணங்களாக ஆடம்பர குற்றவுணர்ச்சி, ஏமாற்றப்பட்டோம் எனும் எண்ணங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன..[1]
இது புலப்பாட்டு முரண்பாட்டிலிருந்து தோன்றுவதாக அறியப்படுகிறது, குறிப்பாக முடிவெடுத்த பின் வரும் முரண்பாடுகளால் ஏற்படுகிறது. அதிமுதலீடுகளில் ஈடுபடும்போது, இரண்டு ஒத்த மாற்றுக்கள் (மாற்று வழிகள், பொருள்கள்) இருக்கும்போது, இக்கழிவிரக்கம் ஏற்படுகிறது.[2]
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Gerard Bell (July 1967), "The Automobile Buyer after the Purchase", Journal of Marketing, JSTOR 1249023
- ↑ Gilovich, Thomas; Rosenzweig, Emily (Feb 2012). "Buyer's remorse or missed opportunity? Differential regrets for material and experiential purchases.". Journal of Personality and Social Psychology 102 (2): 215–223. doi:10.1037/a0024999. https://archive.org/details/sim_journal-of-personality-and-social-psychology_2012-02_102_2/page/215.