வாசந்தி காடில்கர் உன்னி

பெண்கள் அனைத்துலக சதுரங்க மாசுட்டர்

வாசந்தி காடில்கர் உன்னி (மராத்தி: वासंती खाडिलकर उन्नी; ஆங்கில மொழி: Vasanti Khadilkar Unni, பிறப்பு: ஏப்பிரல் 1, 1961) என்பவர் ஓர் அனைத்துல பெண்கள் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தை வைத்துள்ள இந்திய சதுரங்க வீராங்கனையாவார். மராட்டியரான இவர் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பெண்கள் சாம்பியன் பட்டப்போட்டியின் முதலாவது வெற்றியாளர் உண்ணியாவார் [3]

வாசந்தி காடில்கர் உன்னி
Vasanti Khadilkar Unni
நாடுஇந்தியா
பிறப்பு1 ஏப்ரல் 1961 (1961-04-01) (அகவை 63)
பட்டம்பெண்கள் அனைத்துலக மாசுட்டர்
பிடே தரவுகோள்2120
உச்சத் தரவுகோள்2135 (சனவரி 1990)[1][2]
1980 ஆம் ஆண்டு வல்லெட்டாவில் நடைபெற்ற 24 ஆவது சதுரங்க ஒலிம்பியாடில் காடில்கார் சகோதரிகள்

.

செயசிறீ, வசந்தி, ரோகிணி ஆகிய காடில்கார் சகோதரிகள் இந்தியப் பெண்கள் சாம்பியன் சதுரங்கப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். போட்டி தொடங்கி நடைபெற்ற முதல் பத்தாண்டுகளில் அனைத்து பட்டங்களையும் இவர்களே வென்றனர் [3].

1984 ஆம் ஆண்டு பிரைட்டனில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் சாம்பியன் பட்டப் போட்டியில் பாக்யசிறீ சாதீயுடன் இணைந்து கூட்டாக வசந்தி உண்ணியும் வென்றார் [4][5].

மேற்கோள்கள்

தொகு
  1. Khadilkar, Vasanthi FIDE rating history, 1979-1984 at OlimpBase.org
  2. Unni, Vasanti FIDE rating history, 1985-2001 at OlimpBase.org
  3. 3.0 3.1 Menon, Ajay (3 June 2012). "Anand’s win fires former chess whiz from Girgaon". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (மும்பை) இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808060700/http://www.hindustantimes.com/comment/columnsothers/anand-s-win-fires-former-chess-whiz-from-girgaon/article1-865227.aspx. பார்த்த நாள்: 5 August 2014. 
  4. "Barua Finishes Third". ChessMate. அக்டோபர் 1991. Archived from the original on 24 நவம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2016.
  5. "British Champions 1904 – present". BritBase. பார்க்கப்பட்ட நாள் 7 April 2016.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசந்தி_காடில்கர்_உன்னி&oldid=3588132" இலிருந்து மீள்விக்கப்பட்டது